கோபத்தின் நிஜ முகம்
குரங்காய் ஒரு கோபம்
வால் சுருட்டி மூர்க்கமாய்
முகம் கோணி உர்ரென்று
கிளை மீது காத்திருக்கும்
யார் மீது பாய்வோம் என்று.
கடித்து விட்டால் காயம் படும்.
ரணமாக வடுவாக
நின்று விடுமே என்று
கால் மாற்றி கால் மாற்றி
கடைசியில் கதவடைத்து
கண்ணீரோடு மூலையிலே
சுருண்டு கொண்டு வாய் மூடி
ஊமையாகும் சொல்ல முடியாத
சில வேதனைகளோடு
இந்த இதயம்.
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
