குளுசை

“அப்பா நேரத்துக்கு குளுசை எடுத்தியலா அதுவும் சாப்பாட்டோடு எடுக்கவேண்டும் என்பதை மறந்து விடாதீர்கள், செல்லத்துரையின் இரு பிள்ளைகளில் இரண்டாவது பிள்ளையான செல்வி தகப்பனுக்கு நினைவூட்டினாள். செல்லத்துரையின் மனைவி செல்லம்மா இறந்து மூன்று வருடங்கள் கடந்து விட்டது. அவள் உயிரோடு இருக்கும் பொதுகணவனின் தேவைகளைக் கவனித்து வந்தாள்;. செல்லத்துரை காரைநகரைச் சேர்ந்தவர் அவரின் தந்தை முருகேசுபாணதுறையில் பல சரக்குக் கடை வைத்திருந்தவர். அவரின் கீழ்வேலை செய்து வியாபார யுக்திகளைக் கற்றவர்செல்லத்துரை. தந்தையின் மறைவுக்குப் பின் சுயமாகக் கொழும்பு பிரதான வீதியில் உள்ள ஐந்து லாம்புச் சந்தியில் ஏற்றுமதி - இறக்குமதி வியாபாரம் செய்து கோடிக் கணக்கில் சம்பாதித்தவர். ஒரு காலத்தில் பெரிய வெங்காயமும் டின் மீனுக்கும நல்ல மதிப்பு இலங்கையில் இருந்தது. அதை இறக்குமதி செய்யும் உரிமை பெற்றவர் செல்லத்துரை. அவரை பெரியவெங்காயம் என்று அழைப்பர்

கொழும்பு 7 என்ற விலை உயர்ந்த கறுவாக் காடு என்று அழைக்கப்படும் பகுதியில் ஒரு நான்கு அறைகள் கொண்ட வீடு.யாழ்ப்பாணத்தில் உள்ள சுண்டுக்குளியில் ஒரு வீடு. பூனகரியில் இருபது ஏக்கரில் வயல். வங்கிச் சேமிப்பில் ஏராளமானபணம். செல்லத்துரையர் தன் . மூத்த பிள்ளையான செல்வனைப் படிப்பதுக்கு ;லண்டனுக்கு அந்த காலத்தில் கப்பலில்அனுப்பிய செலவு எல்லாம் அவர் சேர்த்த சொத்தில் ஒரு பகுதி . லண்டனுக்குப் போன செலவன் அங்கு தன்னோடு படித்தஜூலியா
என்ற வெள்ளைக்காரக் கத்தோலிக்க பெண்ணை தன் பெற்றோரின் அனுமதி இன்றிதிருமணம் செய்து கொண்டுஆறு வருடங்களாகியும் செல்வன் ஊருக்குத் திரும்பவில்லை. கடிதம் கூட போடவில்லை அனைப் பற்றிய கவலைசெல்லம்மாவை வெகு விரைவில் மரணத்தைத் தழுவ வைத்தது.

செல்லம்மாவுக்கு டயபடீஸ் வியாதி. செல்லதுரையருக்கு இருதய வியாதி. இருவரும் அடிக்கடி மருத்துவரிடம் போய் வருவதற்கும் பரிசோதனைகளுக்கும் ஏராளமாய் பணம் செலவு. கடைசிக் காலத்தில்செல்லம்மாவுக்கு கண் பார்வை குன்றியது. அப்படி இருந்தும் தன் கணவனுக்கு கடமையைச் செய்ய அவள் தவறவில்லை.

ஒரு நாள் செல்வியை அழைத்து “ இராசாத்தி உனக்கு ஒன்று சொல்ல விரும்புகிறன். எனக்குக் கடைசி காலம்நெருங்கிவிட்டுது. அண்ணன் இல்லாத படியால் அப்பாவைக் கவனிப்பது உன் பொறுப்பு. எனக்குத் தெரியும் நீஅதுக்காகக் கலியாணம் செய்யச் சம்மதிக்கவில்லை என்று. உன் அண்ணன் லண்டனுக்கு போய் ஆறு வருசமாகியும் எங்களுக்குக் கடிதம்கூட போடவில்லை. எங்களுக்குக் கொள்ளி வைக்க அவன் ஒருவன் தான் வாரிசு அவன் இப்போ எங்களை மறந்திட்டான். நீ தான் ராசாத்திஎங்களுக்கு எல்லாம்”, என்று கண்கிளில் கண்ணீர் மல்ச செல்லம்மா சொன்னாள். அவள் சொல்லி மூன்றாம் நாளே அவள் கண்ணை மூடிவிட்டாள்
செல்வி தகப்பனுக்கு நேரத்துக்கு குளுசைகொடுப்பதுக்கு ஏற்றவாறு வீக்லி மருந்து போடும் சிறு பெட்டியைவைத்திருந்தாள். தினமும் காலையில் உணவுக்கு முன்
மூன்று குளுசைகள். பகல் உணவோடு நான்கு குளுசைகள். பின்இரவு உணவுக்கு முன் மூன்று குளுசைகள் . தினமும் மொத்தமாக பத்து குளுசைகள்
செல்லதுரையின் வயிற்றை நிரப்பும் . ஒவ்வொரு குளுசையும் வேறு பட்ட பருமனில் வெவ்வேறு நிறங்களில் உள்ளவை., குளுசைகளை மாறி எடுத்தால்
உயிருக்குஆபத்து ஏற்படலாம் என்று டாக்டர் எச்சரித்து இருந்தார்..

அன்று சனிக்கிழமை பகல் போசனத்துக்கு செல்லதுரை தன் நண்பரும் வீட்டுத் தரகருமான கந்தையாவை அழைத்து இருந்தார்.. கந்தையர் பெரும் ரியல் எஸ்டேட்; புரோக்கர். செல்லதுரைக்கு கொழும்பு 7 யில் வீடு வங்கி கொடுத்தவர் அதில் நண்பரானார். செல்லதுரை போசனைப் பிரியர். ஒவ்வொரு சனிக்கிழமையும்
செல்லதுரையர் தலைக்கு எண்ணை வைத்து நீராடுவ்து வழமை அதன் பின் ஒரு பிரண்டி அருந்துவார். பகல் போசனத்துக்கு ஆட்’டு இறைச்சி கறியும் எலும்பு போட்ட
சூப்பும் அவசியம்இருக்க வேண்டும் ஒரு முறை ஹார்ட் அட்டாக வந்தபின் மருத்துவரின் கட்டளைப் படி கொழுப்பு உள்ள உணவைத் தவிர்த்தார்

செல்வி குளுசைகளை பகல் போசனத்தின் போது செல்லதுரையர் எடுக்கும் குளுசைகளை கொடுத்து “அப்பா உங்கடை நண்பரோடு கதையிலை குசைகளை எடுக்க மறக்’க வேண்டாம் ஒரு பிரண்டிக்கு மேல் எடுக்க வேண்டாம்என்று தந்தைக்;கு நினைவூட்டி விட்டுத தன்ன வேலைகளை கவனிக்கச் சென்றாள்.

செல்வி கொண்டு வந்து கொடுத்த நான்கு வர்ணக் குளுகளை பார்த்து
“ என்ன செல்லர ஒரு நாளைக்கு எத்தனை குளுசைகள் எடுக்கிறீர்.?. இது தான் உமடைய போசனத்துக்கு முன் அப்பிடைசரோ” சிரித்து நக்கலாக கந்தையர்
கேட்டார்.
“ எனக்கு குளுசைகள் கணக்கு தெரியாது செல்வி தருவதை அவளின் கட்டளை படி நான் செய்கிறேன் . ஒரு வருசத்துக்கு முன் இரண்டு குளுசை தான் எடுத்தனான் ஒவ்வொரு தடவையும் டாக்டர் சோமசுந்தரத்திடம் போய் வரும் போது
உடம்பிலை அது குறைவு இது குறைவு என்று காரணம் சொலி ஒரு குளுசை எடுக்கும் படி கூட்டி எழுதித் தருவார்”

“ யார் டாக்டர் சோமசுந்தரமே.அவர் எதாவது தோற்று நோய் என்றல் உடனேஇரத்த பரிசோதனை செய்யச் சொல்லுவார். அதன் பின் உடனே அண்டிபயடிக் எழுதி விடுவார். அவர் கிளினிக்கில் அதை செய்வதுக்கு வேறு காசு. அவரது கிளினிக்கில் மருந்து வாங்க பார்மசி, எக்ஸ்ரே, அல்ட்ரா சவுண்ட், இரத்த பரிசோதனை எல்லாம் செய்யலாம்., இந்த குளுசை எழுதுவது அவருக்கு அது ஒரு பிஸ்னஸ் என்றார் “ . கந்தையர்

“ கந்தையர் நீர் ஒரு குளுசையும் எடுக்காதவர் பிரசர், சக்கரை வியாதி நீரக வியாதி இருதத்ய நோய் போன்ற வியாதிகள் இல்லாதவர். இபோதும் அறுபதுஆறு வயது வந்தும் இருபது வயது வந்த வாலிபனைப் போல் இருக்குறீர். அதன் இரகசியம் என்ன என்று எனக்குச் சொலுமன் ”? செல்லத்துரையர் கேட்டார் .

“ என் அப்பா 95 வயது வரை நோய் நொடி இல்லாமல் வாழ்ந்தவர். கார் விபத்தில் இறந்தவர் என் பாட்டனர் நூறு வயது வரை இருந்தவர். அவர்களின் மரபணு எனக்கு வேலை செய்யுது. சர்க்கரை வியாதி டைப் ஓன்று மரபணுவோடு தொடர்புள்ளது. உம்முடைய மனுசிக்கு அது இருந்தது. நான் டாக்டரிடம் போய் இரண்டு வருசத்துக்கு மேல் ஆகிவிட்டது. கால் சுளுக்’கியபோது இரண்டு வருசத்துக்கு முன் ஒரு தடவை டாக்டரிடம் போனேன் . எக்ஸ்ரே பிளாஸ்டர் எல்லாம் சேர்த்து பத்தாயிரம்
ரூபாயுக்கு மேல் பில் வந்தது.., நான் உம்மைப் போல் போசனப்’ பிரியர் இல்லை. எனக்கு உமைப் போல் தொந்தி கூட இல்லை தினமும் இரண்டு மைல்கள் நடப்பேன். நீரும் வாரும் நடப்பன் என்றல் வரமாட்டீர். சாக்கு போக்குச் சொல்லி விடுவீர். “ விளக்கம் கொடுத்தார் கந்தையர்.

இருவரும் பல பிஸ்னஸ் விசயங்கள் பற்றி பேசிக் கொண்டே செல்லத்துரையார் ஐந்து பிராண்டியும் கந்தையர் இரண்டு பிராண்டியும் குடித்தார்கள் செல்லததுரையரின் பேச்சு தளும்பியது. சாப்பிட முன் செல்வி கொடுத்த குளுசைகளை விழுங்கினார்
உணவு உண்ணும் போது செல்லததுரையருக்கு கண்கள் இருண்டன.

" நெஞ்சை பிடித்தபடி” ஐயோ செல்வி நெஞ்சு வலிக்குது. மூச்சு விடக் கஷ்டமாய் இருக்குது . “ என்று கதறிய படி உடல் வியர்க்க செல்லத்துரையர்’ கதிரையில் சாய்ந்தார்
“ இதுக்குத் தான் அப்பா பிறண்டியோடு குளுசை எடுக்க வேண்டாம் என்று டாக்டர் திருப்பித் திருப்பி சொன்னவர். நீங்கள் கேட்டால் தானே” என்ற சத்தம் போட்டபடி ஆம்புலன்ஸ்சுக்கும் டாக்டருக்கும் செல்வி பொன் செய்தாள். கந்தையர் பேய் அறைந்த மாதிரி பேசாமல் இருந்தார் .
******

எழுதியவர் : பொன் குலேந்திரன் - கனடா (9-Oct-17, 4:47 pm)
பார்வை : 164

மேலே