கதா விலாசம் ----எஸ்ராமகிருஷ்ணன்---------நூல் அறிமுகம்

எழுததாளரகள காலததின கணணாடிகள _ சமூகததின சாடசிகள! ஒரு பறவையின எசசம மணணில பெரு மரமாய நிழல விரிபபது மாதிரி, ஒரு படைபபு வாழவை இனனும இனனும அரததபபடுததியபடி வாழநதுகொணடே இருககும எபபோதும. நம தமிழ மரபே கதை மரபுதான. வைததது யார எனத தெரியாமல வளரநது அடரநதுகிடககிற வனததைபபோல கதைகளும நமமைச சுறறி வளரநதுகிடககினறன. நமமில பெருமபாலானவரகள கதைகளின கைகளைப பிடிதது நடை பழகியவரகள. தமிழின முககியமான எழு
-----------------------------------
தமிழில பலவேறு காலகடடஙகளில வாழநத ஐமபது முனனணி எழுததாளரகளின அறிமுகக குறிபபுகள அடஙகிய தொகுபபே இநநூல. வாழவின பல பரிணாமஙகளையும விசிததிரஙகளையும அவலஙகளையும அபததஙகளையும சிறு மகிழசசிகளையும ஆராயவதன மூலம ஒவவொரு அததியாயமும தொடஙகுகிறது. அநத ஆராயவுககு சமபநதபபடட ஒரு சிறுகதைககு முனனேறி அநத சிறுகதைச சானறின மூலம அநத எழுததாளரின ஆளுமை உணரததபபடுகிறது. அபபடியே அநத எழுததாளரைப பறறிய சிறு குறிபபும இடம பெறுகிறது. (முககியமான நூலகள, பிறபபு, இறபபு, உததியோகம, குடுமபம, இவறறைப போல தகவலகள)

வெகுஜன வாசிப்புக்காகவே எழுதப்பட்ட கதாவிலாசம் முற்றிலும் இலக்கியப் பரிச்சியமே இல்லாத பொதுமக்களுக்கு (ஓரளவு )நவீன தமிழ் இலக்கிய இலக்கியத்தைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவே முக்கியமாக எழுதப்பட்டிருப்பதால், தீவிர இலக்கிய வாசகர்கள் எதிர்பார்க்கும் அளவு தகவல்களைக் கொண்டிருப்பது சாத்தியமில்லை.

தீவிர இலக்கியத் தாகம் கொண்டவர்களுக்கு ஜெயமோகன் எழுதிய “நவீன தமிழ் இலக்கிய அறிமுகம்” போன்ற மிகச்சில நூல்களே உதவிக்கு உள்ளன. ஆனால் அப்படிப்பட்ட நூல்களும் குறைந்தது 20 வருடங்களாவது பின்தங்கி உள்ளன.

இப்போது, இந்த காலத்தில், 2017-இல் தரமான தமிழ் இலக்கியம் மீது பற்று கொண்டு இந்த வாசிப்புலகில் நுழைய விழைபவர்கள் தற்காலத் தமிழ் இலக்கியத்தைப் பற்றி ஒரு solid, comprehensive, reliable guide to contemporary Tamil Literature இல்லாமல் தவித்து, தடுமாறி, பல நீண்ட இணைய தேடல்களுக்குப் பின் சில அரிய பயனுள்ள இலக்கிய தளங்களை serendipitous ஆக கண்டுபிடித்து, மூச்சுத் திணறி கரையேற வேண்டி இருக்கிறது.

இவர்களின் (என்) தேவை – ஒவ்வொரு முக்கியமான எழுத்தாளனின் தனித்துவம், எழுத்து, உத்திகள், அவனுடைய எழுத்தின் முக்கியமான, தொடர்ந்து தென்படும் மையக்கருத்துகள் போன்றவைகளைப் பற்றிய அலசல். அவனுடைய மொத்த oeuvre, அல்லது முடிந்த மட்டில் அவனுடைய முக்கியமான படைப்புகளின் ரசனை மற்றும் கோட்பாடு விமர்சனங்கள். இரு வருடங்களாகத் தேடி இத்தகைய ஒரு தொகுப்பைத் தொகுக்க யாரும் தமிழில் பெருமுயற்சி செய்யவில்லை என அறிந்து சோர்ந்து, இப்போது நானே ஒரு வலைத்தளத்தில் தொகுக்கலாம் என முடிவு செய்துள்ளேன். (விமர்சனங்கள் கண்டிப்பாக உண்டு, மறுப்பதற்கில்லை. ஆனால் அவை பல்வேறு இடங்களில் சிதறியுள்ளன. புதிதாக தமிழ் இலக்கியத்தை அணுகும் ஒருவனுக்கு அதனை மிகவும் approachable ஆக ஆக்க வேண்டும் என்பதே என் குறிக்கோள். உங்களுக்குத் தெரிந்து இப்படி ஒரு முயற்சி ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டிருந்தால், தயவுசெய்து அடியேனிடம் தெரிவிக்கவும்! :P)
கிட்டதட்ட பத்து வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட இத்தொகுப்பில் சில தற்கால முக்கியமான எழுத்தாளர்களும் ( சு.வெங்கடசன், பா. வெங்கடசன், ஜோ டி குரூஸ்,etc.), ஏற்கனவே குறிப்பிடப்பட்டுள்ள எழுத்தாளர்கள் கடந்த பத்து வருடங்களில் எழுதிய முக்கியமான நூல்களும் விடுபட்டிருப்பதால் (அஞ்ஞாடி, ஒரு சிறு இசை, த, etc.) இதனைப் புதுப்பித்தல் அவசியமாகிறது.

இந்நூலைப் படிக்கும் போது தமிழில் குறிப்பிடத்தக்க பெண் எழுத்தாளர்களே இல்லையா, அல்லது அவர்கள் இங்கே குறிப்பிடப்படவில்லையா என்ற அச்சம் எழுகிறது. பழம்பெரும் எழுத்தாளர்களில் பாரதியார் மட்டும் தான் குறிப்பிடப்பட்டுள்ளார் என்றாலும் அவரைப் பற்றிய இறுதி அத்தியாயம் இத்தொகுப்பின் மறக்க முடியாத, மிகச் சிறந்த அத்தியாயங்களில் ஒன்று. பாரதியின் நூல்களை இப்போதே தேடிப் படிக்க வேண்டுமென்ற ஆர்வம் எனக்குள் எழுந்துள்ளது. இருந்தாலும் 50 என்ற வரையறை வைக்காமல் நாமக்கல் கவிஞர், பாரதிதாசன் போன்ற முக்கியமானவர்களை சேர்த்திருக்கலாம். இந்த தொகுப்பைப் போலவே சாரு நிவேதிதா எழுதியுள்ள “பழுப்பு நிறப் பக்கங்கள்” என்ற நூலும் குறிப்பிடத்தக்கது. ஆர்வமுள்ளவர்கள் அதை வாசிக்கலாம்.


பி.கு.

1. தொடர்ந்து இந்த நூலையே வாசித்துக் கொண்டிருந்தால் எஸ்ராவின் நடை சலிப்பு தட்டி விடும். பிற நூல்களை வாசிக்கும் பொழுது இதை parallel ஆக வாசித்தல் உசிதம்.

2. மற்ற அனைத்து எழுத்தாளர்களின் இறப்பைக் குறிப்பிடும் போதும் அவர்கள் இறந்த ஊரை குறிப்பிட வேண்டிய அவசியத்தைக் கொள்ளாமல் சுந்தர ராமசாமி மட்டும் “அமெரிக்காவில் இறந்தார்” என்பது ஏதோ ஒரு பெருமை போலக் குறிப்பிடப்படுகிறது. இங்கு மட்டுமில்லாமல் பெரும்பாலான இடங்களில் சுந்தர ராமசாமியைப் பற்றி எங்கு பேச்சு எழுந்தாலும் யாரும் இதைக் குறிப்பிட மறப்பதில்லை. மற்ற எழுத்தாளர்கள் சென்னையிலோ மதுரையிலோ தவறியதைக் குறிப்பிடத்தகுந்ததாகக் கருதாதவர்கள் இதை மட்டும் ஏன் மறப்பதில்லை? ...

எழுதியவர் : (10-Oct-17, 1:50 am)
பார்வை : 80

மேலே