அவள் பெயர் நிலா --- முஹம்மத் ஸர்பான்

உன் புன்னகையை
சலவை செய்து
கவிதை எழுதுகிறேன்
உன் வியர்வையை
நுகர்ந்த காற்று
பூக்களின் ரகசியம்
உன் இமைகளோடு
பட்டாம் பூச்சிகள்
ஒப்பந்தம் செய்கிறது
உன் சலங்கையின்
சங்கீத ஓசையில்
மின்மினி பிறக்கிறது
கண்ணீர் நதிகளில்
கனவின் படகுகள்
விக்கிச் சாகிறது...,
நிலவின் முகமூடிகள்
என் பார்வையில்
உன் கூந்தல் முடிகள்
சந்தனக் காற்று
உன் சுவாசத்தை
காதல் செய்கிறது
நீ உறங்குகின்ற
நேரம் பார்த்து
பூமியும் ஏங்குகிறது
பச்சை மரங்களின்
நடுவே குயில்களும்
அவளது சிநேகிதம்
தேகத்தை விரும்பும்
அகிலத்தில் இன்று
காமத்தின் அங்கங்கள்
செயலிழந்து போகிறது
உன் குறும்புகள்
மழலை போல
முத்தம் தருகிறது
இதழின் கருவில்
வார்த்தை கூட
மெளனமாகிறது.
உன் முகவரியில்
எனது நெஞ்சம்
காதலின் அஞ்சல்
இப்படிக்கு,
அவள் பெயர் நிலா!

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (11-Oct-17, 5:58 pm)
பார்வை : 260

மேலே