பாவனமான சிரிப்பு

பாவனமான சிரிப்பு
அவளின் சிறப்பு
ஜிம்மிக்கி கம்மல்
அடிக்கும் மின்னல்
வெளீர் புன்னகை
தொலைந்த பொன்நகை
நெற்றிக்கு குங்குமம்
வெற்றிக்கு ஊக்கமே
தங்ககுணத்தின் தாக்கமே
கருமை தீட்டி
பெண்மை பூட்டி
பளபளக்கும் பற்கள்
வெல்லட்டும் சொற்கள்
அழகு கூடட்டும்
மொழிகள் பிறக்கட்டும்

எழுதியவர் : கவிராஜா (12-Oct-17, 10:20 pm)
பார்வை : 236
மேலே