பிடிவாதம்

பிறவிக்குணங்களுக்கு வருகின்ற வாதம்...

குழந்தை பிறப்பின் போது பிரசவ வலிக்குள்ள பிடிவாதம்...
பிரிகின்ற உறவுகளின் போது பிடித்திருக்கும் உணர்வுகளுக்குள் பிடிவாதம்...
அழுகின்ற வேளைகளில் அருகி வரும்
கண்ணிர் துளிகளுக்குள்ள பிடிவாதம்...
அண்மை கால அரசாங்கத்தில் அதிகரித்து வரும் அரிசி விலைக்குள்ள பிடிவாதம் ...
முடிகின்ற சோகத்திற்கும் தளைக்கின்ற
வலிக்குமுள்ள பிடிவாதம்..
விடியல் காலைக்கும் விழிக்கின்ற விழிகளுக்கிடையில் பிடிவாதம் ...

ஆனால் என் பிடிவாதத்தின் பிரதிபலிப்பு
ஆகாரத்தின் மீது அகங்காரம்...
என்குடும்ப கூட்டினுள்
வாதிபிரதிவாதங்கள் ஓங்கினால்
உண்ணா இரவுகளாய் தொடர்கின்ற
என் பிடிவாதப்போராட்டங்கள்
இப்போதல்லாம் இரைப்பைழற்சியின்
இடையூருகளால் ஓரிரு இரவுகளுக்குள்
இடைநிறுத்தப்படுகின்றன...
பிடிவாதப்போரட்டத்தின் காரணங்கள்
நேர்த்தியானவை..
ஆனால் சற்று காரசாரமானவை..
அன்னையில் கெஞ்சல்களுக்குள்
தலைகுனிகின்றபோதிலும் என் பிடிவாதம்
தனக்கென இடம்பிடிப்பதற்காய்
தக்க சமயத்தில் தன்னாட்சி புரிகின்றது..

வீட்டை தவிர வெளியுலகம் அறிந்ததில்லை என் பிடிவாதம்..
ஆனால் வீட்டில் சூடிக்கொண்ட
மகுடம் பிடிவாதக்காரி...

எழுதியவர் : (13-Oct-17, 7:43 pm)
Tanglish : pidivaatham
பார்வை : 282

சிறந்த கவிதைகள்

மேலே