என் உயிரினும் மேலான --- தொகுப்பு வெளியீடு
அன்பு தோழர்களே தோழிகளே............
என் உயிரினும் மேலான என்ற எனது படைப்புக்கு உங்களிடமிருந்து பலர் பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் கொடுத்துள்ளீர்கள். எனக்கு இவ்வளவு பெரிய அங்கீகாரம் தந்த உங்களின் பொற்பாதங்களுக்கு என் நன்றிகளை சமர்ப்பிக்கிறேன். மேலும், அந்த கதை 72 பகுதிகளாய் வெளியிட்டேன். இப்போது அதை தொகுத்து ஒரே பெருங்கதையாய் வெளியிட எண்ணுகிறேன். அதில் இருந்த சில எழுத்து பிழைகளையும் லாஜிக் பிழைகளையும் திருத்தி ஒரே பகுதியாக வெளியிட எண்ணுகிறேன். அதற்கு உங்களின் கருத்துக்களை வரவேற்கிறேன்.
கதையில் பிறந்து உங்கள் மனங்களில் இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கும் பிரவீன், விஜி, முபாரக், நர்கீஸ், ரம்யா, காயத்ரி, விஜய், ரியாஸ், ரகு, வெற்றி, கதிர் போன்ற பாத்திரங்களை மீண்டும் சந்திக்க விருப்பப்படுகிறீர்களா. அவர்களை நீங்கள் மட்டும் அல்ல, உங்களின் தெரிந்தவர்கள், குடும்பத்தினர்கள், நண்பர்களுக்கும் சொல்லுங்கள். அவர்களும் படித்துவிட்டு அவர்களின் கருத்துக்களை சொல்லட்டும். உங்களின் கருத்துக்கள் தான் என்னை போன்ற புது எழுத்தாளர்களுக்கு உத்வேகம் தரும்.
ஏற்கனவே, நாகராணி மடனகோபால், வேலாயுதம் ஆவுடையப்பன், மணி பாலன், அனுஷா, சுஜி, கவிதா, சர்பான் போன்ற நண்பர்கள் நல்ல கருத்துக்களை தெரிவித்துள்ளனர். நன்றி தோழர் தோழிகளே.........