தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள்

தித்திக்கும் இனிப்போடு தீப ஒளி திருநாளும் வந்ததே
இருள் அகற்றி வாழ்வில் ஒளியேற்றிட இத்திருநாள் அமைந்ததே
நெஞ்சமெல்லாம் ஆனந்தம் பெருகிட இந்நாள் வாய்த்ததே
புத்தம்புது ஆடை உடுத்தி
வெடிக்க பட்டாசும் சுவைக்க பலகாரமும் மாறி மாறி
கைகளில் போட்டி போட இரண்டுமே தீர்ந்திடுமே
உறவினர்கள் வீட்டில் நிறைந்து கலகலக்க மனசெல்லாம் ஒளி நிறைந்திடுமே
எங்கும் கண்டினும் கண்கவரும் வண்ணவண்ண வானவேடிக்கைகள்
கைகளில் மத்தளமாய் பொரியும் மத்தாப்புக்கள்
சுழற்றிசுழற்றி சுழலும் சங்குச்சக்கரங்கள்
வானைக் கிழிக்கும் வெடிகள்
நிலவின் ஒளியை தோற்கடித்திடும்
தீபத்தின் ஒளி
என்றுமே மகிழ்ச்சியில் துள்ளிடுவோடும்
ஆனந்தமாய் கொண்டாடுவோம்
துன்பமெல்லாம் மறந்திடுவோம்
இன்பத் திருநாளில்
தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள்!

எழுதியவர் : பிரகதி (16-Oct-17, 1:25 pm)
பார்வை : 237

மேலே