தித்திக்கட்டும் தீபாவளி

புதுப்புது வகைகள்
புத்தாடை ரகங்கள்..

பறக்கும் ராக்கெட் வெடி
பயம் காட்டும் பாம்பு மாத்திரை
புகையை கிளப்பிச் செல்லும்..

பிள்ளைகளின் மனம் விரும்பும்
மத்தாப்பு..சாட்டை..சங்கு ..சக்கரம்
வகை வகையான வண்ண வெடிகள்..
வந்த வண்ணம் உள்ளன..

புதுப் புது பெயர்களோடு
வெடிகளின் அணிவகுப்பு
பட்டாசு கடைகளில்..

வாங்கிச் செல்லும் மக்கள் கூட்டம்..

புத்தாடை பட்சணத்தோடு
தித்திக்கும் தீபாவளி
இன்பம் பொங்கும் இனிமையாக..

புஸ்..என புஸ்வானம் போல்
துயரம் நீங்கி அனைவரின் வாழ்வும்
நாவிற்கு சுவையூட்டும்
இனிப்பை போல இனிக்க..
அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்..

எழுதியவர் : வே.புனிதா வேளாங்கண்ணி (17-Oct-17, 4:20 pm)
பார்வை : 617

மேலே