எதிரெதிர் இருக்கைகளில்

எதிரெதிர் இருக்கைகளில்தான்

நானும் அவனும்.

அன்றும் ...இன்றும் !


அன்று வகுப்பறையில் கேள்விகள் கேட்ட நான்,

இன்று தன் அலுவலக அறையில், கேள்விகள்

கேட்கும் அவன் முன் !


பேருவகையில் நான்

நன்றிப்பெருக்குடன் அவன்

எதிரெதிர் இருக்கைகளில்!!

எழுதியவர் : சித்ரா ராஜாசிதம்பரம் (27-Jul-11, 4:35 pm)
சேர்த்தது : chithra rajachidambaram
பார்வை : 302

மேலே