தேசாந்திரி ------நூல் அறிமுகம் -----

கிணறறுத தவளையாக வாழும மனிதரகள தானுணடு தன வேலையுணடு எனறு இருநதுவிடுகினறனர. ஆனால, சுதநதிரததோடு தேடல மனமகொணட மனிதரகள உலகததை அறியத துடிககிறாரகள. அதறகு, பயணபபடுதல அவசியமானது.
பயணம எலலோருககும வாயததாலும, ரசிபபுததனமையும கூரநத பாரவையும இருநதால மடடுமே இயறகையைக கறகமுடியும. அபபடிப பயணததை விருமபி _ ஊரசுறறி பலவறறைப பாரததுப பிரமிதத எஸ.ராமகிருஷணன, அநத அறபுத அனுபவததை சுவாரஸயமாக ஆனநத விகடனி கிணற்றுத் தவளையாக வாழும் மனிதர்கள் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருந்துவிடுகின்றனர். ஆனால், சுதந்திரத்தோடு தேடல் மனம்கொண்ட மனிதர்கள் உலகத்தை அறியத் துடிக்கிறார்கள். அதற்கு, பயணப்படுதல் அவசியமானது.
பயணம் எல்லோருக்கும் வாய்த்தாலும், ரசிப்புத்தன்மையும் கூர்ந்த பார்வையும் இருந்தால் மட்டுமே இயற்கையைக் கற்கமுடியும். அப்படிப் பயணத்தை விரும்பி _ ஊர்சுற்றி பலவற்றைப் பார்த்துப் பிரமித்த எஸ்.ராமகிருஷ்ணன், அந்த அற்புத அனுபவத்தை சுவாரஸ்யமாக ஆனந்த விகடனில் 'தேசாந்திரி'யாக வாசகர்களுடன் பகிர்ந்துகொண்டார். அந்தப் பயண அனுபவத்தை ஒருங்கே பெறுவதற்கு, இதோ அழகிய புத்தக வடிவம்.
சென்றுவரும் இடங்களைப் பற்றி எழுதும் பலர், அதனை வெறும் பயணக் கட்டுரைகளாகவே எழுதுகின்றனர். ஆனால், எஸ்.ராமகிருஷ்ணன், அந்த இடம் குறித்த பல வரலாற்றுக் குறிப்புகள், அவ்விடங்களை அடைந்தபோது நேரும் சிலிர்ப்புகள் போன்றவற்றை அற்புதமாக வெளிப்படுத்தியிருக்கிறார். ...

எழுதியவர் : (17-Oct-17, 5:24 pm)
பார்வை : 229

சிறந்த கட்டுரைகள்

மேலே