தலை கீழ்
வலியோடு வழிந்தபடி சோகங்களை சொல்லாமல் செவி தாண்டி செல்லும் கண்ணீர் துளிகள்
தினம் நான் பார்ப்பார்ப்பவன் என்னை கடந்து சென்றும் நலம் விசாரிக்காத நொடிகள்
கருவறையை கொடுத்தாலும் உறவுகள் கரம் பிடித்து வழி அனுப்பும் கருணை இல்லங்கள்
இதயம் தவறு என்று சொல்லியும் ..தூண்டும் மூளையின் பேச்சை கேட்கும் மனிதர்கள்
தாகத்தை தீர்க்கும் குவளையையும் கழுத்தை பிடித்து தூக்கும் மனிதர்கள்
வரம் கொடுக்கும் இறைவனுக்கும் சிறைத்தண்டனை கொடுக்கும் மனிதம் கோவில்களில்
இறைவனும் அசைவம் உண்டதாலோ என்னமோ இந்த வகை தண்டனை
.
புத்தாடைகள் இல்லை பட்டாசுகள் இல்லை வயிற்றி தீக்கங்கு முத்தமிட
வெடித்து சிதறுகிறது ஏழையின் மகிழ்ச்சி ....கொண்டாடி மகிழ்கிறது வறுமையின் சூழ்ச்சி
எல்லா நாட்களும் போல் இல்லாமல் விழாக்கள் தான் இங்கு வெறுமையை உணர்த்தி விட்டு செல்கிறது
உறவுகளும் உணர்கிறார்கள் நான் உயிரோடு இருப்பதை பணத்தோடு நடமாடும் பொழுது
ஒரு மனிதனை கொன்றால் வியப்பாக பார்க்கிறோம் ஒரு விலங்கை கொன்றால் விருந்தாக பார்க்கிறோம்
மனிதம் இறந்தால் பிணம் விலங்கு இறந்தால் பணம் பிணமும் விலை போகும் அவலம் ஆச்சரியம்
இவையெல்லாம் கற்று கொடுக்கும் இந்த வாழ்க்கை எதார்த்தம் என்றால் ஏன் வாழவேண்டும் , சகித்து கொண்டு