என்னவளுக்காக

அவள் கைகோர்த்து
கடற்கரை ஓரம் நடக்க..
அலை வந்து
அவள் பாதம் நனைக்க..

அவள் தேகம்
என் தேகம் மேல் இடிக்க..

ஆசையாய்
முத்தம் ஒன்று நான் கேட்க..
கோபம் கொண்டு இடைக்கண்ணில்
அவள் பார்க்க..

வேண்டும் என்று நான்
அடம்பிடிக்க..
வேண்டாம் என்று செல்லமாய்
அவள் எனை அடிக்க..

வலிப்பது போல் நான் நடிக்க..
அது தெரிந்தும் அவள் எனை
அணைக்க..

இறுதியாக இருயிர் ஓருயிராகி
இதழ் சேர்த்து முத்தம் எனும்
கவிதையை பரிமாறிக்கொண்டது..!

❤சேக் உதுமான்❤


Close (X)

9 (4.5)
  

மேலே