125 கோடி இந்தியர்களை மகிழ்ச்சியாக தீபாவளி கொண்டாட வைத்து விட்டீர்கள் ராணுவ வீரர்களிடம் மோடி

: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டில் உள்ள குரேஸ் பகுதியில் பிரதமர் மோடி ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடினார்.

பிரதமர் மோடி ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையை எல்லையில் உள்ள ராணுவ வீரர்களுடன் கொண்டாடி வருகின்றார். இந்நிலையில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பந்திப்போரா மாவட்ட எல்லையில் உள்ள குரேஸ் என்ற ஊரில் படை வீரர்களுடன் பிரதமர் மோடி கொண்டாடினார்.



அப்போது ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடிய அவர் நாட்டில் உள்ள 125 கோடி இந்தியர்களையும் மகிழ்ச்சியாக தீபாவளி கொண்டாட வைத்தீர்கள் என பாராட்டு தெரிவித்தார். மேலும் உங்களுடைய கனவுகளும் பொறுப்புகளும் எங்களுடைய பொறுப்பு என்றும் அவர் கூறினார்.

மொத்த நாடும் உங்கள் தோளுக்கு தோள் கொடுக்கும் என்றும் அவர் கூறினார். மோடி பிரதமராக பதவியேற்ற பிறகு 2014ஆம்
ஆண்டு எல்லையில் உள்ள சியாச்சின் மலை உச்சியில் தீபாவளியை கொண்டாடினார்.

இதைத்தொடர்ந்து 2015ஆம் ஆண்டு பஞ்சாப்பில் இந்தியா பாகிஸ்தான் எல்லையில் தீபாவளியை ராணுவ வீரர்களுடன் மோடி கொண்டாடினார். கடந்த ஆண்டு இமாச்சலப் பிரதேசத்தில் பிரதமர் மோடி தீபாவளியை கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

எழுதியவர் : (19-Oct-17, 2:37 pm)
பார்வை : 78

மேலே