இப்படியா ஆடை அணிவார் மலாலாவை சீண்டும் நெட்டிசன்கள்=-----

லண்டன்: அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மலாலா யூசப்சாயின் புகைப்படம் ஒன்று பர்தா இல்லாமல் பேஸ்புக்கில் வெளியானதை அடுத்து சிலர் அவரது ஆடை குறித்தும், மலாலாவுக்கு எதிராகவும் சோஷியல் மீடியாவில் பேசி வருகின்றனர்.

இந்தப் புகைப்படத்தில் மலாலா ஜீன்ஸ் பேண்ட் மற்றும் சட்டையுடன் ஷால் அணிந்து காணப்படுகிறார். பேஸ்புக் பக்கம் ஒன்றால் இந்தப் புகைப்படம் முதலில் வெளியிடப்பட்டது.

இந்தப் புகைப்படம் வெளியானதில் இருந்து சமூக வலைத்தளங்களில் அவருக்கு எதிராக சிலரால் கடுமையான கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றது.


அமைதிக்கான நோபல் பரிசு
உலகின் மிக முக்கியமான பெண் போராளிகளில் ஒருவர் மலாலா. 2012 ஆம் ஆண்டு இவர் தாலிபான்களால் பஸ்ஸில் வைத்து சுடப்பட்டார். மிகவும் உயிருக்கு போராடிய இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டார். இவர் பெண் கல்விக்கு ஆதரவாக பேசியதாலும், தாலிபான்களுக்கு எதிராக குரல் கொடுத்து வந்ததாலும் சுடப்பட்டார். இதையடுத்து மிகவும் புகழ்பெற்ற இவர் 2014 அமைதிக்கான நோபல் பரிசு வாங்கினார்.

ஆக்ஸ்போர்டில் மலாலா
இந்தத் தாக்குதலுக்கு பின் மலாலாவின் வாழ்க்கையே மாறிப் போனது. ஐநா சபையில் உரை, வாழ்க்கை வரலாறு என நிறைய வேலைகளை அடுத்தடுத்து பார்த்து வந்தார். இந்த நிலையில் அவர் மீண்டும் தன்னுடைய படிப்பை தொடர விரும்பி, லண்டனில் இருக்கும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழத்தில் சேரும் முடிவை எடுத்தார். அதுமட்டும் இல்லாமல் இது குறித்து அவர் சமூக வலைதளத்தில் மக்களின் கருத்தையும் கேட்டிருந்தார்.

தற்போது இவர் ஜீன்ஸ் மற்றும் சட்டை அணிந்து ஷாலுடன் லண்டன் தெருக்களில் நடப்பதை போன்ற புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. மிகவும் வைரல் ஆகியுள்ள இந்த புகைப்படத்திற்கு சிலர் ஆதரவாகவும், சிலர் எதிராகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இது ஒரு பேஸ்புக் பக்கத்தில் முதலில் வெளியிடப்பட்டது.
now jeans..shoes...soon that dupatta will be out

— அடிப்படைவாதிகளின் எதிர்ப்பு
மலாலா அணிந்திருக்கும் உடையை கிண்டல் செய்யும் சில அடிப்படைவாதிகள் , அவர் மிகவும் மாறிவிட்டதாக கூறுகின்றனர். மேலும் அவர் வந்த வழியை மறந்து விட்டதாகவும், அவர் செய்வது தவறு என்றும் கூறிவருகின்றனர். இதில் பல கருத்துக்கள் மிகவும் மோசமான நிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. அனைத்தையும் மீறி சிலர் மலாலாவிற்கு துணையாக பேசி வருவதும் குறிப்பிடத்தக்கது.

: ஷியாம்சுந்தர் , October 19, 2017,

எழுதியவர் : (19-Oct-17, 2:43 pm)
பார்வை : 61

சிறந்த கட்டுரைகள்

மேலே