விழி பேசும் மொழி
விழி பேசும் மொழி...!
விழி பேசும் மொழி யாவும்
மயி லாடும் பேரழகா னால்
மொழி பேசா நாவி னிலும்
வழிந் தோடி நற்கவி பாயும்.
மை யிலகு விழி யுலவும்
மையல் ஒன்றே வையத்து
மயிலழகு வாழ்க்கை யென
விளங்க வைக்கும் வித்தே!
கண்மை தீட்டி கயலது காட்டி
கார் முகிலுண்ட களாபமாகி
களி நடமாடும் காதல் விழியே!
காமன் உறங்கிடும் கனவுலகே!