ஆசை
ஆசை கோர்த்த நரம்புகளின் கூட்டில் நான் அவதரிக்க
எலும்பு கூட்டில் நீ சதைவளர்க்க
உன்னை போல் மருத்துவம் உலகிலும் இல்லை அம்மா
பிணிகள் இல்லாத கருவறை பிண்டம்
இவள் உதிரமே எனக்கு தின்பண்டம்
நானும் ஒப்புக்கொள்கிறேன் குடி இருந்த
கோயில் அவளின் கருவறையை என்று
இறைவனின் படைப்பை நானும் ஒப்பு கொள்கிறேன்
பிறக்கையில் எல்லாம் உடுக்கை கூட
இல்லாமல் பிறக்கும் கருவறை பிண்டம் தான்
வல கையிலும் ஒன்றும் இல்லை
இட கையிலும் ஒன்றும் இல்லை
பிடிசோறும் இல்லை பிடித்த சாரும் இல்லை
தாகம் தீர்க்க அவளின் உதிரம் தவிர வேறு புனித நதியும் இல்லை
என் சோகம் தீர்க்க அவளை தவிர வேறு நாதியும் இல்லை
கோடை வெப்பமும் நுட்பமாய் உறக்கம் தந்தது
கருவறைக்கு நான் இருந்தாலும் உன் வியர்வை பணியில்
உன் இதைய துடிப்பே ஏன் முதன் நண்பன் அம்மா
அவனோடு பேசி பழகிவிட்டேன் எனக்காய் அவன்
துடித்ததை எண்ணிபெருமையும் கொண்டேன்
ஆதலால் தான் அவனை பிரிந்து வரும்போது அழுதுவிட்டேன்.
தூரமாய் நீ இருக்கையில் என் அழுகை
நீ தூக்கி அணைப்பதே எனக்கு தொழுகை .
வளர வளர தந்தையை சிந்தை அறியத்தொடங்கியது
நான் தவழ ஆசைப்பட்டது உங்கள் பதம் தொடத்தான் தந்தையே
ஆசையாய் நீங்கள் தொட்டு தூக்கி ஆசீர்வாதம் தந்தீர்கள் நான் மறவேன்
வேகமும் நடைபழகும் உங்களிடம்
வேர்வையும் துயில் கொள்ளும் நெஞ்சருகே தங்களிடம்
உங்கள் கை பிடியில் நடை பழகியது எனக்கு கர்வம் தான் பிதாவே
தாயின் இதய ஓசை என் துயிலை சுகமாகியது
தந்தையி இதய ஓசை என் துயிலுக்கே வரமாகியது
பட்டம் பெற்று நான் எட்டி வானம் தொட . பத்திரமாய்
நூலை தரையில் இருந்து வானம் எட்ட உயர்த்தினீர்கள்
எத்தனை உயரம் நான் சென்றாலும் உங்கள் கையால்
உயரும் பட்டமாகவே நான் வாழ ஆசை படுகிறேன் தந்தையே
உயிர் தரிக்கும் ஏழு பிறவியும் உன்னில் சங்கமம் ஆகா வேண்டும் அம்மா
சங்கமம் நான் செல்ல சிங்க முகமே நீங்கள் அருள் புரிய வேண்டும் அப்பா!
என்னை போலத்தானே எல்லோரையும் வளர்த்தி இருப்பார்கள்
சக்கரை வெள்ளமாய் அன்பாய் கரையும் உள்ளங்கள்.
பிறகு ஏன் அக்கறை இல்லாமல் அனாதை இல்லம் சேர்க்கும் கள்ளம்
பூமியும் சில நேரம் பூகம்பம் கொள்ளும் இவர்களை கொல்லத்தான்