நண்பன் அவன் நட்பு
நண்பன் அவன் நட்பு கிடைத்தது
நான் அடைந்த பெரும் பாக்கியம் என்பேன்,
நான் தேடி அலைந்த அத்தனையும்
அந்த நட்பெனும் கற்பக விருக்ஷம் தன்னுள்
நான் கண்டேன்; நல்லோர் சேர்க்கை.
நல்ல குருவின் சிக்ஷை , தாயின்
அன்பும், பரிவும் கள்ளமில்லா
குழந்தையின் மனமும் இன்னும்
எதெத்தனையோ அத்தனையும்;
நண்பா ,உன் நட்பின் முன்
கோணி குறுகி நிற்கின்றேன் நான்-
உன் நட்பை ஏற்கும்தகுதியும் உண்டா
எனக்கு என்று எண்ணி எண்ணி