கண்டால் தெரிபவன் கடவுள்
கடவுளை நேரில் காணவில்லை
கண்டாலன்றி அவர் உள்ளார்
என்று ஒப்பொக்கொள்ளமாட்டேன்
என்று கூறி அலையும் நாத்திகருக்கு
உங்கள் பக்கத்திலே உலாவிவரும்போது
அவரைக் காண நீர் தவறிவிட்டால்
அவர் இல்லை என்று கூறுவது தவறல்லவா
நாம் தினம் தினம் உறங்கி எழும்போது
நமக்குமுன்னே உதித்து நம்மை
ஆர்ப்பரிக்கும் ஆதவன் அவனைக்
கண்டபின்னுமா கடவுளைக் காணவில்லை என்கிறீர் ?
சுயம்பு அவன் . உயிருக்கு உயிராய்
இருந்து ஒளியும், இருளுமாய் காட்சி தருகிறான்
அந்த மாபெரும் ஒளியே கடவுள்
அவன் ஒளி இல்லை என்றால்
மண்ணில் ஜீவராசிகளுக்கு வாழ்வில்லையே
இப்படித்தான் பார்க்கும் அத்தனையிலும்
அவன் காட்சிதருகின்றான் நம் அகந்தை
இரணியனாய் வந்து 'அவனைக்'காண
தவறுகிறது, இல்லை அவன் என்கிறது
புரிந்தால் தேவன் வீடு தெள்ளத்தெளிவு .