ஆசை முகம்

ஆசை முகம் கண்டேனடி
அதில் பேசும் கண்கள் கண்டேனடி ...
மௌனமே பாஷையாய் கொண்டோமடி
அதில் உலகமே மறந்து கிடந்தோமாடி...

ஆசை முகம் கண்டேனடி
அதில் காதல் கனவுகள் கண்டேனடி...
உள்ளம் உரசிட கண்டேனடி
அதில் காதல் நிறைந்திட கண்டோமடி...

ஆசை முகம் கண்டேனடி
அதில் தவிப்புகள் பல கண்டேனடி...
இரு கரம் சேர்ந்திட கண்டேனடி
ஊர் நின்று வாழ்த்திட கண்டோமடி...

எழுதியவர் : ப.வெ. உத்ரா (22-Oct-17, 11:34 am)
சேர்த்தது : ப வெ உத்ரா
Tanglish : aasai mukam
பார்வை : 110

மேலே