காதலாகிய ஊடல்கள்

காதலாகிய ஊடல்கள்
-----------------------------------------

நொடிப்பொழுதும் ஊடல்கள் புரிவோம்...
எந்நொடியும் காதல் புரிந்து...

விட்டு விலக மாட்டோம்...
இமை மூடும் பொழுதும்...

வேண்டுமென்றே சண்டைகள் போட்டுக் கொள்வோம்...
முன்னாடி கோபமாய் நடித்து
பின்னாடி சிரிக்க
பார்த்து பார்த்து சிரிப்பாய்...

அடித்துக்கொண்டே அரவணைப்போம்...
அழுதுகொண்டே சிரித்திடுவோம்...

ஒருவரை ஒருவர் வெறுப்பேத்துவோம்...
யாரிடமும் விட்டுக் கொடுக்க மாட்டோம்...

ஒருவரை ஒருவர் கிள்ளி விளையாடுவோம்...
ஒருவர் மடியில் ஒருவர்...

ஞாயிறில் குளிர்ச்சியாய்
திங்களில் வெப்பமாய் நாங்கள்...

நீ சரிகையில்
(என் உயிரில்)நான் தாங்கிடுவேன்...
என் மடியில் உனை சுமந்திடுவேன்...
உன் கரம் கோர்த்துக் கொண்டு மேலே எழுவோம்...
உன் கரம் கோர்த்து நடப்பேன்...(பல யுகங்கள்)...

யுகயுகமாய் ஊடலிட்டே காதல் புரியும் காதலர்கள் நாம்...
ஒரு நொடியும் பிறர் திட்ட விட மாட்டோம்...

சென்மங்களாய் உந்தன் மடியில்
உன்னோடு மல்யுத்தம் செய்து
உன்னோடு சிரித்து
உன்னோடு அழுது
உன் தோள் சாய்ந்து
உன்னோடு சாய்ந்து
உன்னோடு சரிந்து
உன்னோடு எழுந்து
உன்னோடு மட்டும் வாழ்வேன்...

உன்னோடு மட்டும் ஊடல் புரிவேன்...
உன்னை மட்டும் காதலிப்பேன்...

காதல் பூரிந்து ஊடல் செய்வோம்...
கூடல் நகரில் சங்கமிப்போம்...

ஆயிரம் கிளைகள் நாம் விரிப்போம்...
ஆணிவேராய் இணைந்திருப்போம்...

இதயத்தில் நாம் சேர்ந்திருப்போம்...
அணுவில் பிணைந்திருப்போம்...

~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (29-Oct-17, 8:14 am)
பார்வை : 96

மேலே