கலியுகக் காதல்

மனதோடு மனம் கொண்ட புனித காதலை விளம்பாத இருளுக்குள் வாழ்வோர், சாதியென்பார்...
மதமென்பார்...
நிறமென்பார்...
மானமென்பார்...
மொழியென்பார்...
நாடென்பார்...
காதலுக்குத் தடையாய் அத்தனையும் அடுக்கி வைப்பார்...

காதலில் மெலியவர் விதியென்று விலகிடுவார்...
வலியவர் தடைகளை உடைத்தே வாழ்ந்திடுவார்...

முட்டாள்களின் காதல் கவிதைகளில் மட்டும் மிளிர்கின்றது...
நானும் அதிலொரு முட்டாள் தான்...
கற்பனைகளில் காதலைப் பாடி கவிதைகளில் ஆனந்தம் கொள்கிறேன்...

கண்ணை நம்பாதேயென்று கவிஞனும் சொன்னான்...
கேட்டேனா?
கண்ணில் நுழைந்த அவளை நம்பினேன்...
அநாதையானேன்...

காதலென்றால் ஆன்ம பந்தமென்று நானும் கதைகட்ட யதார்த்தம் புரட்டிக் காட்டுகிறது காதலென்பது காம சாஷ்திரமென்று...

காதலே உயர் ஒழுக்கமென்றேன்...
நாய்கள் போல கூடும் காதலைக் கண்டேன்...
ஒருத்தி பின்னால் எத்தனை ஆண்கள்!?...
அவளும் சளைத்தவளா என்ன??...

அவன் கூட சில காலம்...
இவன் கூட சில காலம்...
கைபேசியும், இருசக்கர மோட்டார் வாகனமும் மிளிர்ந்தால் போதும்...
அதுக்கொரு காதல் பூக்கும்...
ஆடம்பரக்காதலே அகிலமெங்கும்...
மீடியாக்களும், திரைப்படங்களும் அதற்காக வக்காளத்து வாங்கும்...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (2-Nov-17, 8:45 am)
Tanglish : kaliyukak kaadhal
பார்வை : 231

மேலே