உறவெனும் நெருப்பில்

உறவெனும் நெருப்பில்
உறவெனும் நெருப்பில் எரிந்து கருகி
பிறந்துஇறந்து பெரும் பாடெய்தி
கருவரைதனிலே கை கால் முடக்கி
கவலைகள் சுமந்து புவியில் பிறந்து
காசு பணமெனும் மாயையை துரத்தி
அவலப்பட்டு அல்லல்கள் சூழ
கல்லறை நோக்கி பயணப்படுவோம்
இடையே காணும்
இன்னல்களிடையே
மனிதம் பேணி மகத்துவம் காப்போம்
மன்பதை உய்ய தன்னலம் துறப்போம்

எழுதியவர் : ச ரவிச்சந்திரன் (2-Nov-17, 4:48 pm)
Tanglish : uravenum neruppil
பார்வை : 412

மேலே