ஆசை

நான் கன்னம் கிள்ளும் குழந்தையென
நீ மாறிட ஆசை
நான் கைப்பிடிக்கும் தந்தையெனவும்
நீ மாறிட ஆசை
நான் காதை திருக்கும் வாண்டுவாக
நீ மாறிட ஆசை
என் காதை சுற்றும் வண்டாகவும்
நீ மாறிட ஆசை
நான் மிச்சம்வைக்கும் ஆட்டமென
நீ மாறிட ஆசை
நான் உச்சம்போகும் வெற்றியென
நீ மாறிட ஆசை
நான் ரசித்திடும் மழையென
நீ மாறிட ஆசை
நான் புசித்திடும் உணவென
நீ மாறிட ஆசை
நான் முத்தமிடும் மழலையென
நீ மாறிட ஆசை
நான் சத்தமிடும் சந்தோஷமாகவும்
நீ மாறிட ஆசை
நான் பார்க்கும் கண்ணாடி
என நீ மாறிட ஆசை
நான் வேர்க்கும் வெயிலென
நீ மாறிட ஆசை
நான் தேடும் போர்வையென
நீ மாறிட ஆசை
நான் சேர்க்கும் செல்வமென
நீ மாறிட ஆசை
நான் தோற்கும் வெற்றியென
என நீ மாறிட ஆசை
நான் கேட்கும் சங்கீதமென
நீ மாறிட ஆசை
நான் முணுமுணுக்கும் இசையென
நீ மாறிட ஆசை
நான் கதகதக்கும் குளிரென
நீ மாறிட ஆசை
நான் வெதுவெதுக்கும் சுடுநீராகவும்
நீ மாறிட ஆசை
நான் பத்பதாக்கும் படபடப்பாகவும்
நீ மாறிட ஆசை
நான் துடிதுடிக்கும் இதயமாகவும்
நீ மாறிட ஆசை
நான் ஆர்ப்பரிக்கும் அலைகளென
நீ மாறிட ஆசை
நான் சிரித்துதீர்க்கும் சந்தோஷமாக
நீ மானிட ஆசை
நான் அழுதுகோர்க்கும் கண்ணீராகவும்
நீ மாறிட ஆசை
நான் தேடும் தேடலாக
என நீ மாறிட ஆசை
நான் நாடும் நேசமென
நீ மாறிட ஆசை
நான் போடும் கோலமென
நீ மாறிட ஆசை

நான் பூரித்துப்போகும் உணர்வென
நீ மாறிட ஆசை
நான் மரித்துப்போகும் மரணமென
நீயே ஆகிட ஆசை

எழுதியவர் : சஹாயா சாரல்கள் (4-Nov-17, 12:22 pm)
Tanglish : aasai
பார்வை : 147

மேலே