இயற்கையின் எழில்கள்

பாடி பறக்கும் வானம்பாடி
கார் கால மேகங்களின் மையலில்
தன்னை மறந்து கூவிக்கொண்டிருக்கும்
சோலைக் கருங்குயில்
மாமரக் கிளையில் பழுத்த
மாங்கனியை கொத்தி சுவைத்துக்கொண்டே
பக்கத்தில் தன பேடையுடன் கொஞ்சி குலாவும்
ஜோடி கிளிகள்
சிற்றிடை வஞ்சியர்க்கும்
பரதம் பயில்விக்கும்
தோகை விரித்தாடும் மையில் கூட்டங்கள்
மயன்தான் அமைத்து கொடுத்தானோ
தாழ்ந்து செழித்து நிற்கும்
குட்டை பனைமர கீற்றினிலே
வியந்தரும் இந்த தொங்கும் வண்ண கூடுகள்
அதிலிருந்து கும்மாளம்போட்டு உள்ளும் வெளியும்
வந்து போகும் தூக்கணாங் குருவிகள்....................

ஒன்றாய் நாம் இருந்தால்
நன்றாய் வாழலாம் என்று
கற்று தருகின்றனவா !
மரம் மரமாய் சிறு படையாய்
பழங்கள் தேடி கும்மாளமாய் குதித்து
செல்லும் மந்திகள் கூட்டம்
வாசமிகு பூக்கள், நறுமணம் தரும்
மூலிகைகள் என்று இவற்றின் மீது
தவழ்ந்து, ஒய்யாரமாய் நடனமாடி வரும்
காட்டருவி ..................ஓடும் நீரின்
கலகலப்பில் இசைத்தோடும் ஓடைகள்
நீர்பருக குட்டிகளோடு அணிவகுத்து செல்லும்
யானைகளின் கூட்டம் .....................
துரத்திவரும் வேங்கையைக் கண்டு
பதறி துள்ளி துள்ளி மருண்டோடிடும்
மான்களின் கூட்டம் .......................
கூட்டம் கூட்டமாய் ஊளையிட்டு
சதி செய்ய காத்திருக்கும் குள்ள நரிகள்
சூரியனின் ஒளி கிரணங்களையும் கூட
உள்ளே அனுமதிக்க தயங்கும் ஓங்கி
உயர்ந்து வளர்ந்த மரங்கள் செழித்த வனங்கள் .....

அப்பப்பா , என்னென்று கூறுவேன் இந்த
இயற்கையின் எழிலை ........................

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (4-Nov-17, 2:51 pm)
பார்வை : 413

மேலே