எதிர்மறைகள்

உறவில் உள்ளவன்
உள்ளம் நாடுகிறது
துறவை..

தூய
துறவைக் கொண்டவன்
உறவை ருசிக்கிறான்-
மறைவாய்..

எதிர்மறைகள்
நடைமுறைகள் ஆகும்போது,
எழுதப்படுகின்றன தீர்ப்புகள்-
திருத்தி...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (7-Nov-17, 5:32 pm)
பார்வை : 109

மேலே