முதல் பார்வையில் காதல்

மெல்லிய நுனியில் மெல்ல திறந்த மலரிதழ் மீது விழுந்த காலைக்கதிரொளியோ ....
இல்லையில்லை அது சற்றே சுடும் .!
களித்திட குதித்திட்ட நீர் நிலை சேற்றில் சிக்கிய நிலையோ ....
இல்லை இல்லை அது உயிரைக்கொல்லும் நிலையாகிடுமே .!
அழுது புரண்ட மழலைக்கருகிலே கையில் கிடைத்த மரப்பாச்சியின் தீண்டலோ ....
இல்லை இல்லை எனக்கு பதின் பருவம் நடந்து கொண்டிருக்கிறது.!
.
.
.
என்ன எழுதிகொண்டிருக்கிறேன் நான் எனக்கே புரியாமல் ,,,......
புரிந்து விட்டது என்ன நடக்கிறதென்று.
உன் முதல் பார்வையில் தோன்றிய காதலால் முழுமுதற் பித்தனானேனோ !?

எழுதியவர் : சரவணா பாரதி (7-Nov-17, 5:34 pm)
பார்வை : 76

மேலே