உழைப்பின் மேன்மை

சிலையழ காகும் சிற்பியின் உழைப்பால்
கலையெழில் கூடும் கலைஞனின் உழைப்பால்
விலைமதிப் பில்லா வெகுமதி உழைப்பே!

தாழ்ந்த நிலைக்குத் தள்ளப் படினும்
வீழ்ச்சி தன்னை விதியென விடாமல்
வாழ்வில் உயர்த்தும் மட்டிலா உழைப்பே!

உழைப்பின் வெற்றி உயர்வினை யளிக்கும்
மழைபோல் மனத்தை மகிழ்ச்சியால் நனைக்கும்
தழைக்கச் செய்யும் தரணியில் உழைப்பே!

( ஆசிரியத்தாழிசை)

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (7-Nov-17, 9:18 pm)
பார்வை : 4039

மேலே