யாருமில்லை
இரவு தூங்கும் நேரத்தில்
இனிய கனவு பூத்ததடி!
பரம சுகத்தில் திளைத்திருந்தேன்
பார்த்த யாவும் மறந்ததடி!
வரவில் சிலிர்த்தேன் வெண்ணிலவே
வருடிச் சென்றாய் ஒளிவீசி!
உரிமை யோடு கதைபேச
உன்னை யன்றி யாருமில்லை!
சியாமளா ராஜசேகர்

