எங்கும் நன்மை விளையட்டும்

எதுவும் மாறாதா நண்பா...
மீண்டும் அந்த இயற்கை திரும்பாதா...

நிறைய ஊரை சுற்றிப் பார்க்க வேண்டும்...
இயற்கையோடு வாழ வேண்டும்.
அன்பின் மொழி பேச வேண்டும்...

நிறைய மக்கள் ...நிறைய உள்ளம்...
நிறைய இசை...
நிறைய நிறைய அன்பு...
இயற்கை...இசை...

இயற்கை ஒரு சொர்க்கம்
இசை அதில் தாலாட்டு
மனிதம் அதில் மழை
தமிழ்(தாய்மொழி) என் தாய்...
என் அடையாளம்....

இதெல்லாம் சரியாக இருக்க வேண்டும்.இன்னொரு உயிரை துன்புறுத்தல் தவறு.

எல்லாரும் புரிந்து கொள்ள வேண்டும்.எல்லாரும் மனிதன்.
நான் இது நான் அதெல்லாம் ஏது?

__________________

இயற்கையை கொல்லாதீர்.

வரும் தலைமுறை நிம்மதியாக வாழ வேண்டும்...

மொழியை அழிக்காதீர்...
ஓர் இனத்தின் அடையாளம் மொழி...

மனிதத்தை இழக்காதீர்...

பூமி சுடுகாடாகாமல்
பூக்காடாக வேண்டும்...

பூமிக்கு எல்லை இல்லை...
இந்நாடு அந்நாடு என்று...
எல்லைகள் அற்று
மனிதமாக வாழ்ந்து
இயற்கையை ரசித்து வாழ்வோம்...

இயற்கைக்கு எல்லை ஏது?
இசை பிரபஞ்ச மொழி...
மனிதம் மொழி கடந்த உணர்வு...
மொழிகள் உணர்வின் வெளிப்பாடு...

பிரபஞ்ச மொழிகளை காப்போம்...
உலக மொழிகளை மதிப்போம்...

(ஆங்கிலம் உலகின் பல மொழிகளை அழித்தது போல் இந்தியாவில் இந்தி )

தாய் மொழி சேயின் அடையாளம்...
அடையாளம் அற்றவன் பெயர் அகதி...

தாய்மொழியில் பேசுவோம்..

எம்மொழி
எந்த மொழியையும் அழிக்காமல்
எல்லா மொழிகளையும் பெருக்கியது
என்பதே எம் மொழிக்கும் எமக்கும் பெருமை...

(எம் மொழி வாழையடி வாழையாக பல மொழிகளை கிளை பரப்பியது...
எந்த கிளையையும் வெட்டவில்லை)

உலகின் முதல் மொழி...
தமிழ்மொழி...
எம் தாய்மொழி
என்று பெருமையோடு சொல்வேன்...

இயற்கையை பெருக்கி இயற்கையோடு
இசையோடு பண்பாடு கலாச்சாரத்தோடு
வீரமும் அன்பும் சமமாக மனிதமாக வாழ்பவன் ...
தமிழன்...

தமிழில் பேச பெருமைப்பட்டு
~ தமிழச்சி பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (8-Nov-17, 3:56 pm)
பார்வை : 180

மேலே