விதி தேடல்

விதி என்னவென்று உணர
நானே வெற்றிடம் உண்டழித்தேன்

விதி ஏது செய்யவல்லதோ அறியேன்..
விதி மாற்றும் சக்தி ஈசன் தந்தான்
விடுகதை ஒன்றும் சொல்லிச்சென்றான்
"விடையறிந்து விதி மாற்று -இல்லை
வினைபலன் முழுதாய் ஏற்று விதிகாப்பாற்று"

அவ்விடுகதைக்கான
விடைகள் அவளிடமிருக்க,
விதிமாற்ற இயலாமல்
வினைபோக்கில் நகர்கிறது வாழ்க்கை..

உண்மையில்,
உண்டழித்ததாய் சொன்ன வெற்றிடம்
இன்னும் உயிருடன் இருக்கிறது
என்பதே உண்மை.

எழுதியவர் : மகேந்திரராஜ் பிரபாகரன் (9-Nov-17, 5:33 pm)
Tanglish : vidhi thedal
பார்வை : 1458

மேலே