பேப்பர் பையன் பரமு

ரிட்டையர்ட் கல்லூரி பிரின்சிபால் சிவராமனை காலையில் நித்திரையில் இருந்து எழுப்புவது பேப்பர் பையன் பரமுவின் “ஐயா பேப்பர்” என்ற கணீர் என்ற குரல். நான்கு வருடகாலமாக வீட்டுக்கு நேரத்துக்கு பேப்பர் போடுபவன் பேப்பர் பையன் பரமு

சிவராமன் காலையில் எழுந்தவுடன் பல் மினுக்கி, முகம் கழுவியபின்’ வாசலுக்குப் போய் பொலித்தீன் பையுக்குள் இருக்கும் ஆங்கிலம் . தமிழ் தினப் பத்திரிகைகள் இரண்டையும் எடுத்துக்கொண்டு, தனது சாய்மான கதிரையில் இருந்ததும் மனைவி பங்கஜம் சுடச் சுட பசும்பால் கலந்த காப்பியை வெள்ளி டம்ளரில் கொண்டு வந்து கொடுப்பாள். இது அன்றாடம் நடக்;கும்’ நிகழ்ச்சி. காப்பியை குடித்தபடி செய்திகளை’ வாசிப்பதில் சிவராமனுக்கு பெரும் திருப்தி. சிவராமன் முனைவர் பட்டம் பெற்ற ஒரு இலக்கியவாதி பேப்பரில் வரும் கட்டுரைகளையும், சிறு கதைகளையும் வாசிக்க சிவராமன். தவற மாட்டார் அவர் மனைவி பங்கஜமும் ஓரு எம்.ஏ
(M.A) பட்டதாரி. இருவரும் ஆசிரியர்கள். பல வருட சேவைக்கு பின் பிரபல கல்லூரியில் பிரின்சிபலாக இருந்து ரிட்டையர் ஆனவர். சிவராமன்

சிவராமன் தம்பதிகளுக்கு ஜெயராமன். ஒரே ஒரு மகன். அவனை தொழில் நுட்பத் துறையில் படிப்பித்து பொறியிலாளன் ஆக்கிய பெருமை சிவராமன் தம்பதிகளைச் சேரும். இருவருக்கும் ஒரு பேரனோடு விளையாட ஆசை. மகனுக்கு பல திருமணங்கள் அவர்கள் பேசியும் ஜெயராமன் வெளி நாடு செல்வதையே குறிக்கோலாக கொண்டிருந்தான். அவன் விருப்பப்படி அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் ஒரு ஸ்தாபனத்தில் சாப்ட்வேர் என்ஜினியராக வேலை கிடைத்தது, அவன் போய் பல வருடங்கள் ஆகியும் பெற்றொரைப் பார்க்க சென்னை வரவில்லை. கடிதம் கூடப்போடவில்லை. அது சிவராமனுக்கும் மனைவிக்கும் பெரும் கவலை.

தினமும் பேப்பர் போடும் பரமுவை மாதத்தில் ஒரு தடவை . அதுவும் முதலாம் திகதி அன்று’ சந்தித்து பேப்பருக்கான மாதப் பணத்தை சிவராமன் கொடுப்பார். அன்று முதலாம் திகதி. பரமு போட்ட பேப்பறருக்கான பில்லை சிவராமனிடம் நீட்டிய போது.
“என்னடா பரமு உன்னோடு பேச நான் முயற்சித்த போது நீ பேப்பரை போட்டுவிட்டு மின்னல் வேகத்தில் போய்விடுவாய். இண்டைக்கு உன்னோடு கொஞ்ச நேரமாவது நான் பேச முடியுமா” ? சிவராமன் கேட்டார்.
“ஐயா நான் உழைத்தால் தான் என் அம்மாவையும்’ என் தங்கச்சியையும் காப்பாற்ற முடியும். ஒரு நாளைக்கு நான் 12 மன நேரம் ஓடி ஓடி உழைக்கிறேன். “
“அது சரி உனக்கு அப்பா இல்லையா”?
“அவர் குடியால் இறந்து ஐந்து வருடங்கள் ஆயிட்டு சார்”
“அம்மா என்ன செய்கிறா”?
“என் வருமானம் போதாது என்று ஒரு டாக்டர் வீட்டில் வேலைக்காரியாக காலை எழுமணி முதல் இரவு எழு மணி வரை அவளுக்கு வேலை”

“பேப்பர் போடுவது மட்டுமா உன் வேலை”?

“இல்லை. சார். இதில் வரும்’ வருமானம் எந்த மூலைக்கு சார் போதும்”

“வேறு என்ன வேலை செய்கிறாய்”?

“ஒரு உணவகத்தில் பீங்கான் கோப்பை களுவுவேன். நேரம் கிடைத்தால் லொட்டரி டிக்கெட் விற்பேன்”

“ஒரு நாளில் டிக்கெட் முழுவதும் விற்பாயா’?

“சில நாட்களில் நூறு டிக்கெட் விற்றால் கொமிசனோடு எனக்கு’ ஓரு’ டிக்கெட் இலவசமாய் கிடைக்கும் ”

“எங்கை உன் வீடு”?

“உங்கள் வீடு போல் கல் வீடு இல்லை சார். நானும் அம்மாவும் தங்கச்சியும் இருப்பது கூவம் நதிக்ககரையில் உள்ள ஒரு ஓலை குடிசையில்.”

“ஏன் நீயும் உன் தங்கச்சியும் படிக்கவில்லையா”?

“எங்களுக்கு படிப்பா? அதுக்கு எங்க நேரமும் பணமும் சார். நானும் தங்கச்சியும் நாலாம் வகுப்பு வரை படித்த பின் என் அப்பா நாங்கள் படித்தது போதும் என்று எங்களை ஸ்கூலுக்கு அனுப்பவில்லை. எங்கை நாங்கள் இருவரும் படித்து கிழித்து விடப் போகிறோம் என்று சொல்லி எங்களை வேலைக்கு அனுப்பிவிட்டார் சார். அவருக்கு குடிக்க காசு வேணும் ”

“தினமும் இந்த பேப்பர் போடுறாயே. இந்த பேப்பரில் உள்ளதை எப்போதாவது வாசித்து இருக்கிறாயா பரமு”?

“என்ன சேர் சொல்லுறியல்? எனக்கு பேப்பர் வாசிக்கத் தேரியாது சார். அதுக்கெல்லாம் எங்க சார் நேரம். அந்த நேரத்தில் வேலை செய்து இரண்டு காசு சம்பாதிக்கலாம்” பரமு சிரித்தபடி படி பதில் சொன்னான்.

“உனக்கு சந்தர்ப்பம் தந்தால் நீயும் உன் தங்கச்சியும் படிப்பீர்களா?

“என்ன எதோ புதுசாக ஒன்று சொல்லுறியல் சார்”

“புதுசு ஒன்றுமில்லை. உண்மையைத் தான் சொல்லுறன். எனக்கு ஒரு’ மகன் இருந்தான். அவனைப் படிப்பித்து என் ஆசையைப் பூர்த்தி செய்தேன். ஆனால் அவன் எங்களை ஆசையை பூர்த்தி செய்யவில்லை”

“இப்ப எங்க சார் உங்கள் மகன்”.

“அவன் அமெரிக்கா போய் பல வருஷங்கள் ஆயிட்டுது எங்களோடு அவனுக்குத் தொடர்பு இல்லை” கவலையோடு சிவராமன் சொன்னார்.

“எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தால் படிக்க விருப்பம் தான் ஆனால் பணம் வேண்டுமே சார்”
“பரமு நான் உனக்கு அந்த சந்தர்ப்பத்தைத் தாறன். நீ வேலை செய்யும் நேரத்தில் ஆறு மணி நேரம் படிப்புக்கு ஒதுக்கி வை . சனி ஞாயிறுக் கிழமைகளில் வேலை செய். என்ன”?

“எதோ செய்து பார்க்கிறேன் சார்”

“அடுத்த மாதத்தில் இருந்து நீ படிக்க ஆரம்பி. ஒரு தனியார் ஸ்கூலிலை ஒழுங்கு செய்துவிட்டு உனக்கு’ அறிவிக்கிறேன். என்னோடு தொடர்பில் இரு. என்ன”?

“தனியார் ஸ்கூலா? சரியாக செலவாகுமே சார்”:

“அதைபற்றி உனக்கு கவலை வேண்டாம். நான் உனக்கு கொடுத்த வாக்கு தவறமாட்டேன்.”

“சார், என் அம்மாவிடம் ஒரு வார்த்தை பேசி அனுமதி’ பெறுகிறேன்”

“சரி உன் விருப்பப்படி செய். இனி என்னை சார் என்று கூப்பிடாதே. என்னையும்’ என் மனவியையும் பெரியப்பா, பெரியம்மா’ என்று கூப்பிடு’. இங்கு எங்கள் வீட்டில் இரு நேரமும் நீ சாப்பிடலாம் சைவ சாப்பாடு தான்’

“எனக்கு சாப்பாடு முக்கியமில்லை. படிப்பு தான் முக்கியம் பெரியப்பா”

“அப்படிச் சொல்லு பரமு. எனக்கு கேட்க எவ்வளவு சந்தோஷம் தெரியுமா.”?

“என் தங்கச்சி வள்ளியும் என்னோடு சேர்ந்து படிக்கலாமா பெரியப்பா”?

“ என் இல்லை? . அவள் சம்மதித்தால் படிக்கலாம் “

“உண்மையாகவா பெரியப்பா? அவ்ளும் உங்கள் இருவரையும் பெரியப்பா பெரியம்மா என்று கூப்பிடலாமா”?
“நிட்சயயமாக”

*****

பரமுவை சிவராமன் சந்தித்து சில நாட்களாகிவிட்டது அவனுக்கும் வள்ளிக்கும் ஒரு தனியார் கல்லூரியில் பணம் கட்டி இடமும் எடுத்து விட்டார். அவனுக்கு அந்த நற் செய்தியைச் சொல்ல பரமுவை எதிர்பார்த்துக்கொண்டு இருந்தார் ஆனால் பரமு சில நாட்களாக பேப்பர் போட வரவில்லை. சிவராமனுக்கு காரணம் தெரியவில்லை. ஒரு வேளை அவனுக்கு சுகமில்லையோ என்னவோ என நினைத்தார் அவன் பேப்பர் விநியோகம் செய்யும் கடை முதலாளியிடம் போய் அவனைப் பற்றி சிவராமன் விசாரித்தார்,

“உங்களுக்கு பேப்பர் விநியோகம் செய்யும் பரமு என்ற பையன் இப்போ பேப்பர் போட வருவதில்லை . எதாவது அவனுக்கு சுகமில்லையா? என்ன நடந்தது அவனுக்கு.”? சிவராமன் கேட்டார்

“ அதேன் சார் கேட்கிறியள். அதிர்ஷ்ட தேவதையின் பார்வை அவன் மேல் விழுந்து விட்டது” கடை முதலாளி சொன்னார் :

“என்ன ஐயா சொல்கீறீர்கள்”

“ நம்பினால் நம்புங்கள் சார் அவன் பேப்பர் போடுவதோடு லொட்டரி டிக்கட்டும் விற்று வந்தான்:”

“அவன் அதை பற்றி எனக்கும் சொன்னவன்”:

“நூறு டிக்கெட்டுகள் விற்றால், கொமிஷனோடு அவனுக்கு அவன் முதலாளி இலவசமாக ஒரு டிக்கெட் கொடுப்பார்:

:” அதுவும் எனக்குச் சொன்னவன்”

“அந்த இலவசமாக கிடைதத லொட்டரி டிக்கட்டில் முதல் பரிசாக அவனுக்கு அறுபது லடசம் பணம் கிடைசிருக்கு சார் “

“ என்ன அவ்வளவு பணம் பரமுவுக்கு கிடைச்சிருக்கா”?

“ ஆமாம் சார். பாருங்கோ அந்த ஏழை பையன் எவ்ளவு அதிர்ஷ்டசாலி என்று:
கொடுக்கிற தெய்வம் கூரையை பிக்சிக் கொடுத்திருக்கு என்பார்கள் “

“ சரி அவன் இப்ப எங்கே . பரமுவை நான் சந்திக்க வேண்டும்”

“ அவனை இனி நீங்கள் சந்திக்க முடியாது . அவன் குடும்பத்தோடு தன் சொந்த ஊருக்குப் போய்விட்டான் . தன் அப்பா குடிப்பதற்காக அடமானத்தில் வைத்த தங்கள் வீட்டையும் வயல் காணியையும் மீட்டு விவசாயம் செய்யப் போகிறானாம்: அதோடை ஊரில் பத்திரிகை விநியோகம் செய்யும் புத்தகக் கடை ஒன்று வைத்து வேலை இல்லாதவர்களுக்கு வேலை கொடுக்க போறானாம்”

“ அப்போ அவனின் தங்கச்சி வள்ளி”?

“தன்னால் படிக்க முடியாவிட்டாலும் தன் தங்கச்சி வள்ளியைப் படிக்க வைக்கப் பொறானாம்”

“எங்கு இருந்தாலும், பரமுவும் அவனின் தாயும் தங்கச்சியும் நல்லாக வாழ்ந்தால் எனக்குச் சந்தோஷம் “ என்று சொல்லிவிட்டு சிவராமன் புறப்பட்டார்.

*****

எழுதியவர் : பொன் குலேன்திரன் (கனடா) (11-Nov-17, 10:43 pm)
பார்வை : 238

மேலே