கடவுள் கிடையாது

தீதும் நன்றும் பிறர் தர வாரா எனும்...
நம் மொழியே நம் பொன் மொழியாம் .
போரை புறம் தள்ளி பொருளை பொதுவாக்கவே
அமைதி வழி காட்டும் நம் அன்பு மொழி
அய்யன் வள்ளுவனின் வாய் மொழியாம்....
வள்ளுவனின் தமிழுக்கும் தமிழ் நாட்டிற்கும் முதற்கண் வணக்கம் .
கடவுள் இருக்கிறாரா ? இல்லையா என கேட்டால்
இல்லை என்றே நான் கூறுவேன் .ஏன் கடவுள் இல்லை என கூறுகிறாய் என
என்னிடம் நீங்கள் கேட்கலாம் .நான் ஒரு சிறு கதையின் மூலம் உங்களுக்கு
விளக்குகிறேன் கேளுங்கள். ஒரு சிறுமியும் ,அவளுடைய தந்தையும் கோவிலுக்கு சென்றார்கள்.கடவுளை கும்பிடவும் செய்தார்கள்.அந்த சிறுமிக்கு ஏன் கும்பிடுகிறோம்
என தெரியவில்லை. தன தந்தை செய்வதை போல இவளும் செய்தால்.பின் தந்தையிடம் விளக்கம் கேட்டால்.இதுதான் கடவுள்,இவரை வணங்கினால் நம்முடைய பிரச்சனைகளை சரி செய்வர் என்றார் அவளுடைய தந்தை.பிறகு கோவிலை விட்டு வெளியே வந்தனர்.வெளியே வரும் வழியில் கல்லில் செதுக்கப்பட்ட சிங்க சிலையை கண்டால் அந்த சிறுமி.அதை கண்டு அவள் அஞ்சி தன் தந்தையிடம்"அப்பா அங்கே சிங்கம் இருக்கிறது, அது நம்மை கொன்றுவிடும் என கூறினாள்.அவளது தந்தை சிறு நகைப்போடு அது உண்மையான சிங்கம் இல்லை ,அது வெறும் கல் தான் அது நம்மை ஒன்னும் செய்யாது என்றார் . உடனே அந்த சிறுமி ,தான் தந்தையை பார்த்து இது கல் என்றால் உள்ளே
இருக்கும் சிலையும் கல் தானே.இது நம்மை ஒன்றும் செய்யாது என்றால் அதுவும் நம்மை ஒன்றும்
செய்யாதே.அதுவும் இதனை போல் ஒரு கல் தானே என்றால் அந்த சிறுமி.சிறுமியின் பேச்சால்
திகைத்த அவள் தந்தை தனது மூட நம்பிக்கையை எண்ணி தலை குனிந்தார்.
நான் கூறிய இந்த சிறு கதையின் மூலம்,கடவுள் இல்லை என்பதையும்,
இவை அனைத்தும் நமது மூட நம்பிக்கைகள் என்றும் நாம் அறியலாம்.
ஆகையால், உறங்கியது போதும் இனியாவது விழித்துக்கொள்வோம் வாருங்கள்....... நன்றி

எழுதியவர் : ப.முகமது இஸ்மத் பாட்சா (12-Nov-17, 1:36 pm)
Tanglish : kadavul kidayaathu
பார்வை : 325

மேலே