காதலிக்கு

மலர்கொடியே! மான்விழியே! மங்கையர்க்கரசியே! இறவாத காதலினால் எனையாளும் இளவரசியே! எந்நாளும் எனை நினைத்து உறங்காத உமையவளே! என் இமையவளே! இன்னல்கள் பல கடந்து மின்னெலென மீண்டுவந்து இணைபிரியாமல் எனைக் காக்கும் இறைவியே! ஈடில்லா துணைவியே! உன் விரலசைவில் வீழ்ந்து விட வீரர்கள் பலர் இருக்க விசலூரில் பிறந்தவனின் விரல் பிடித்த வித்தகியே! சோழமண்ணில் பிறந்ததனால் சொல்லாமல் வந்ததா! வீரமங்கை குந்தவையின் விந்தையான தந்திரமும்! என் மனதில் குடியேற உரியவளின் படியேறி எடுத்துரைத்தாய் உண்மையை! உற்றவர் அனைவரையும் துச்சமென எறிந்து மிச்சமெல்லாம் உன்னுடன்தான் என்றுரைத்த உத்தமியே! வரமாய் உனை நினைத்து தவமிருக்கும் பலரிருக்க! என் உயிர் சேர்ந்தாயே! நீயும் என் தாயே! உணவிலே கலந்திட்ட காதலினால் என் உயிரிலே கலந்திட்ட மாயவளே!

எழுதியவர் : சுரேந்தர் கண்ணன் (14-Nov-17, 12:40 am)
சேர்த்தது : சுரேந்தர் கண்ணன்
Tanglish : kathalikku
பார்வை : 301

மேலே