வா தங்கை வா

வா தங்கை வா
இதோ வானம்
இதுவே பூமி
அதோ நிலவு
அதுவே நட்சத்திரம்
இவையெல்லாம் அண்டமாம்
இரவும் பகலும் இதில் அடக்கமாம்
வாழ்க்கைக்கு இவைசொல்லும் பாடம்
இருண்டால் விடியும் விடிந்தால் இருளும்
பயம் வேண்டாம்
என்னுடன் நடந்துவா
வாழ்க்கையை கடந்து வா
வா தங்கையே வா...

கோராத...

எழுதியவர் : கோரா.தணிகைமணி (14-Nov-17, 12:58 pm)
Tanglish : vaa thangai vaa
பார்வை : 244

மேலே