அவளும் நானும்

சட்டென ஒரு சிறு தூறல்
மண்ணில் விழுந்து மணம் தரும் முன்பே
என் மனம் அறிந்து
தேநீர் கோப்பையுடன்
மொட்டை மாடிக்கு வந்து
என் கரம் கோர்க்கும் அவள்......

தலை குளித்து கூந்தல் கோதி
முகம் திருப்பும் முன்பே
கூடை பூவோடு அவள் முன்னே நான்...

என் எண்ணம் அவள் சிந்தை
அவள் நினைப்பு என் கருத்து
அவளும் நானும்...
நானும் அவளும்...

எழுதியவர் : சாந்தி ராஜி (15-Nov-17, 11:25 pm)
Tanglish : avalum naanum
பார்வை : 780

மேலே