கொஞ்சிடத் தூண்டிடுதே
குழந்தையின் முகத்தில் குழிவிழும் கன்னம்
***கொஞ்சிடத் தூண்டிடுதே !
நிழல்தரும் மரமாய் நெஞ்சமும் குளிர்ந்து
***நிம்மதி தோன்றிடுதே !
அழகிய மலரின் அற்புத மணமாய்
***அகத்தினை நிறைத்திடுதே !
மழலையின் மொழியோ மனத்தினை மயக்கி
***மகிழ்வுறச் செய்திடுதே !
சியாமளா ராஜசேகர்