என்னவள் முன்

மழை அழகு காண
குடை விரிக்கும்
மழை காளான் - என்னவள்
குடை விரிப்பின் முன்
தோற்றுப்போகும்....

நாதம் இசைக்கும்
இசைச்சுருள் -என்னவள்
பாத கொலுசு முன்
தோற்றுப்போகும்....

சிற்பியின் கையில் உதிர்த்த
சிற்ப மெல்லிடை - என்னவள்
பளிங்கு இடையின் முன்
தோற்றுப்போகும்....

கூந்தல் விரித்த கரிய
கார்மேகம் - என்னவள்
கூந்தல் அலையின் முன்
தோற்றுப்போகும்....

அவளின் பாசத்திற்கு முன்
அனைத்தும்
தோற்றுப்போகும்...

- மூ.முத்துச்செல்வி

எழுதியவர் : மூ.முத்துச்செல்வி (17-Nov-17, 11:03 am)
Tanglish : ennaval mun
பார்வை : 182

மேலே