அம்மாவுடன் ஒரு நாள்

அம்மாவுடன் ஒரு நாள்

காலையில் துயிலெழுந்து
அல்ல என பல் துலக்கி குழந்தைகளை நீராட வைத்து
சட்னியுடன் சூடான இட்லி பரிமாறி
ஞாபகமாய் பானகம் அளித்து
டாண் என்று பிள்ளைகளை பள்ளிக்கனுப்பி
ணாதம் எனும் என வானொலி கேட்டு
தகிட ததிமி என வீட்டை சுத்தம் செய்து
நளனை மிஞ்சிய தமயந்தியாய், விரைவாய், சுவையாய் மதிய உணவு செய்து
படக்கென்று வத்தல், அப்பளம் பொறித்து
மதியம், பிள்ளைகளுக்கு உணவு பரிமாறி
யம்மா!!!என்று சில நிமிடங்கள் கண் மூடி
ராத்திரிக்கு என்ன சமைக்கலாம் என யோசித்து
லவ்வுடன் பஜ்ஜி செய்து மாலையில் சாப்பிட வைத்து
வட்டமாய் சப்பாத்தி,பட்டர் பன்னீர் இரவு பரிமாறி
ழ ழ என்று பாத்திரங்களை துலக்கி
ள ளாவகமாய் கனிகளைவெட்டி உண்ணச்செய்து
ற றக்கம் கண்ணை தழுவ பிள்ளைகளை கண்ணயரச்செய்து
னாளை என்ன சமைக்கலாம் என யோசித்து கண்ணயரும்
அனைத்து அன்னைமாருக்கும் இக்கவிதை சமர்ப்பணம்



ராரே

எழுதியவர் : ராரே (19-Nov-17, 7:19 am)
Tanglish : ammavudan oru naal
பார்வை : 547

மேலே