ஹைக்கூ கவிஞர் இரா இரவி

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

கால்கள்
முளைத்த நிலவு
என்னவள் !

பேசிடும்
மலர்
என்னவள் !

முதல்படி
முன்னேற்றத்திற்கு
சிந்தனை !

வாதாடுவது வாதம்
உரையாடுவது இதம்
பேச்சு !

நெருக்கமாக்கும்
தொலை தூரத்திலிருந்தாலும்
நட்பு !

வழிவகுக்கும்
வாய்மை நேர்மை
புகழுக்கு !

அன்றும் இன்றும் என்றும்
தரும் அறிவொளி
புத்தகங்கள் !


இறந்தபின்னும்
வாழலாம்
பிறர் நலம் பேணினால் !

தெரியாததை
தெரியாது என்பது
நாணயம் !

தெரிந்ததை
தெரியாது என்பது
கபடம் !

காற்று வீசாதிருந்தால்
ஆயிரம் விளக்கேற்ற
போதும் ஒரு சுடர் !

எளிதாகக் கிடைப்பதல்ல
போராடிக் கிடைப்பதே
வெற்றி !

நல்ல கனவு காண்
நாளும் செயல்படு
நனவாகும் !

ஒருமுறை வெற்றி
தலைக்கனம் வந்தால்
மறுமுறை தோல்வி !

சில நேரம் வரம்
சில நேரம் சாபம்
நினைவாற்றல் !

நடந்த கசப்பை மற
நடந்த மகிழ்வை நினை
சிறக்கும் வாழ்வு !

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (19-Nov-17, 6:44 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 100

மேலே