மலர்ந்து கொண்டே வளரும் நட்பு

கார்த்திகை கண்டெடுத்த
கார்முகில் நாயகனே...
கடவுள் எனக்களித்த
கலியுக கர்ணனே...

இடுக்கண் கலைவதாம் நட்பு
இதற்கு இலக்கணம் நீயானாய்..!
இதயத்தில் எனை சுமக்கும்
நீ இன்னொரு தாயானாய்..!

இன்னல்களில் இடிதாங்கியாய்
இன்றுவரை சுமைதாங்கியாய்
கஷ்டத்தில் கடன் தந்தாய்..!
கடைசிவரை உடன் வந்தாய்..!

நிழலாக எனை தொடரும்
நிஜமானதே உன் அன்பு..!
நினைவுகள் அனைத்தும் சொல்லிவிடும்
நீதானே என் தெம்பு..!

கேலி கிண்டல் நான் செய்தால்
போலி கோபம் நீ செய்வாய்...
வேலி தாண்டும் ஆடு என்றும்
வெளிச்சம் குறைந்தால் வீடு தேடுமே..!

சிரித்தே அழுத நினைவுகள் எல்லாம்
சிறகு விரிக்குதே இன்னும் நெஞ்சில்
மரித்து போகும் நிமிடம் வரையிலும்
மலர்ந்து கொண்டே நட்பு வளருமே..!

மரித்து போகும் நிமிடம் வரையிலும்
மலர்ந்து கொண்டே நட்பு வளருமே..!!!

எழுதியவர் : ந.இராஜ்குமார் (20-Nov-17, 1:37 pm)
பார்வை : 1274

மேலே