வாழவிடுங்கள் எல்லோரையும்

(சந்தக் கலித்துறை)
ஆங்கிலர் போனதும் நம்மவர் ஆட்சிபி டிக்கத்தான்
தங்களின் மானம தைவிடுத் தும்தலித் தைநாடிச்
சங்கெடுத் தூதியே சங்கையி லாதுள றிப்போட்டார்
பங்கிடு வோமென சந்திலே சிந்துபா டும் கூட்டம்

கிட்டே அழைத்திட முகத்தைநக்கும் கண்டீரா
பட்ட மரந்துளிர வேண்டிநாமும் கருணைகாட்ட
தட்டிப் பறிக்க முயலுவதோ அனைத்தையுமே
எட்டிப் பழமாய் கசப்பதுண்கு ணம்தானே

வெண்பா
சாதியொழிப் போமெனயெச் சாதியர் சொன்னது
சாதிபோக்க வாச்சுதந்தி ரம்பெற்றோம் --- சாதிச்
சுதந்திரமாய் வாழச் சுதந்திரம் பெற்றோம்
சுதந்திரத்தை யேமாற்றி னார்

தாழ்ந்தவர் துன்பம்முன் வாழ்ந்தார்க்காம் ஏதிப்போ
தாழ்ந்தோர் உயர்வா சுதந்திரம் --- தாழ்ந்தசெயல்
நாமவர்க்கு என்செய்தோம் பாமரரை ஏய்க்கிறார்
நாம்கட்டோம் கப்பமவர்க் கு

தாழ்தவர் சாதிபல பாழ்படுத் தும்தலைகள்
தாழ்த்தப்பட் டோரால் குழப்பமே --- பாழ்படுத்த
மக்களைய வர்சிந்தித் துச்செயல் செய்யவிடார்
மக்களா அத்தலைஎல் லாம் !!
ராஜப் பழம் நீ (21.11.2017)

எழுதியவர் : பழனி ராஜன் (21-Nov-17, 7:36 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 198

மேலே