காதல்

என்னவளே ! எந்தன் உயிரே
நீ என்னுள் எந்தன் சுவாசமாய்
வந்திட மாட்டாயோ என்று நினைத்தேன்
ஆனால் அப்போது உந்தன்
பூத உடல் அல்லவோ
காணாமல் போய்விடும் !
வேண்டாமடி இந்த விஷப் பரீட்சை!
நீ அப்படியே உயிர்கொண்ட சிலையாய்
உலவி வந்திடு எப்போதும் உன்னை
நான் ரசித்திடவே!பூத உடல் 'மாயை' என்றாலும்
அந்த அழகு அதில் இருக்கும் வரை
மாயை' என்னை ஆட்கொள்கிறதே !

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (21-Nov-17, 2:22 pm)
Tanglish : kaadhal
பார்வை : 80

மேலே