கம்பன் ஏமாந்தான்

உவமைகள் "Over-Time" எடுத்தன அவளை வர்ணிக்க...
கற்பனை "Comp-Off " கேட்டன அவளை விவரிக்க..

பெண் தேவதைகளும் பொறாமை கொண்டன,
அவள் நளினம் கண்டு..
பஞ்சம் பெற்றபேறு அவள் இடையில்
தஞ்சம் பெற்றது..

ஓங்கி உயர்ந்த கோபுரம் ஒன்று..
ஒயிலாக கலசங்கள் இரண்டு..

முழுமதி முகத்தவள்
முன் நடந்து செல்ல,
அன்னங்களும் அலாதியாய் பார்த்து நின்றன.. “இனம்” புரியாமல்..

விட்டுப்போன காட்சிகளை
வர்ணிக்க "twitter"- இல் சொல் பொறுக்குகிறது என் பேனா...
எங்கு தேடினாலும்
வார்த்தைக்கு அகப்படாதது
அந்தவஞ்சியின் அழகு என்பேனா..

தன் கோலவிழிப் பார்வையால் கோலமிட...
என்மனம் உள்ளுக்குள் ஒற்றையாய் ஓலமிட..

எண்ணிலா மாற்றங்கள்,
என்னிலாவென எண்ணிநிற்க
எனைக் கடந்து சென்றதந்த பெண்"நிலா" ..
என்வாழ்விலே வசந்தமாய் வந்தவள்..
தன்வாழ்வையே என் வளமைக்காக அளித்தவள்..

- - என் "அவள்"..

#விக்னேஷ்

எழுதியவர் : விக்னேஷ் (22-Nov-17, 5:37 pm)
சேர்த்தது : விக்னேஷ்
பார்வை : 173

மேலே