நித்தமும் அவள் நினைவுதான்

கண்களை மூடி கொண்டு தேடுகிறேன் ,,,,
தொலைந்து போன என் காதலை ,,,,

கற்பனை உலகிலாவது வாழ்வேனா அவளுடன் ,,,,
இல்லை அங்கும் அவனே இருப்பானா அவளுடன் ,,,,!

அவளுக்கு பிடித்தமாய் வாழ தான் இருக்கிறேன் முடிவுடன் ,,,,
ஆனால் அதை ஏனோ ஏற்க மறுக்கிறது ,,,,
அவள் மனம் துணிவுடன் ,,,,!

அவளை நினைத்து எழுதும் கவிதைகள் எல்லாம் ,,,,
நிரப்ப இடமில்லாமல் தவிக்கிறது என் மனதுடன் ,,,,
அதற்கேனும் அடைக்கலம் கிடைக்குமா அவள் மனதிடம் ,,,!

எழுதியவர் : பா.தமிழரசன் (24-Nov-17, 4:11 pm)
பார்வை : 203

மேலே