நட்பு மறந்து போச்சு..
இங்கிலாந்து போன நண்பன் திரும்பி வந்ததைக்கேட்டு ..
நான் போனேண்டா அவனைப்பார்க்க வீட்டு வழியை கேட்டு..
ஆறடியில் சுவருகட்டி வெச்சிருக்கான் காப்பு..
அதில் நாய் கூட நுழையாமல் போட்டிருக்கான் பூட்டு..
நாய் போல நின்றேனே அவன் வரும் வரையும் காத்து..
அவன் அழகான பொண்ணுக்கூட வந்ததடா காரு..
நானும் ஓடிப்போயி நின்றேண்டா நண்பன் என்று பாரு.
எனக்கு இப்போ நேரமில்லை வேலை இருக்கு வேறு..
என்று சொல்லி விட்டு போனாண்டா என் முகத்த பார்த்து..
நான் தலைகுனிந்து போனேண்டா அதை நாலு பேருபார்த்து..
கலர் கலரா உடை உடுத்தி கலக்குராண்டா ஆளு..
நாலு காசு சம்பாதிச்சா ஒசந்து போச்சி கோலரு..
கொஞ்சம் ஆங்கிலம் தான் படிச்சிருந்தா உனக்கு வரும் மவுசு..
நாலு வார்த்த படிச்சி விட்டு வைக்கிராண்டா வேட்டு..
காசு பணத்தை கண்டு விட்டால் நட்பு மறந்து போச்சு..