வெட்டுக்கிளி கண்ணே பாடல் -கங்கைமணி

வெட்டுக்கிளி கண்ணே ! -என்னை
கட்டிப்பிடி பெண்ணே !
முத்தம் தரும் முன்னே -கொண்ட
அச்சம் தவிர் கண்ணே !
கூந்தல் கொடி ..தோலில் பின்ன
கோவை இதழ் கண்ணில் மின்ன.,
கொடிமுல்லை அந்தப்புறமே
கொண்டாட வா வா வனமே
மடிசாயும் மாலை நிலவே
மறவாதே நான் உன் உறவே!.

(வெட்டுக்கிளி கண்ணே ...)

அறிவோமா அறியாக்கலையை
அகம் தேடி ஆளும் நிலையை.
இடைதொட்டால் ஓடும் இனமே
உடையாதோ காமக்குடமே
உரசெந்தன் உயிரும் போக...
உறிந்தாடு உறவில் சாக
கடைஏழு வள்ளல் நீயே
மடியேந்தி வந்தேன் நானே !

(வெட்டுக்கிளி கண்ணே ...)

பாவாடை பாதம் மூட..,
பாரென்று பார்வை தேட.
தொடுவானம் போலப்போனால்
தொலைவேனே நானும் உன்னால்.
படர் எந்தன் பருவக்கொடியே
பகல் வேஷம் வேண்டாமினியே
ஆளில்லா ஆற்றங்கரையே
அலை தொட்டால் பாவம் இல்லையே !.

(வெட்டுக்கிளி கண்ணே ...)

-கங்கைமணி

எழுதியவர் : கங்கைமணி (25-Nov-17, 12:27 am)
பார்வை : 111

மேலே