மழை வரும் நேரம்

வானிலை மாற்றம்
கருமேகக் கூட்டம்
மழலைகளின் ஆட்டம்
மழை வரும் நேரம்...

இன்னிசையோடு பாட்டு
இதமான தேநீர்
இதழோரம் சிரிப்பு
மழை வரும் நேரம்...

மயில் தரும் ஆட்டம்
மனம் அதில் மயங்கும்
மண் வாசம் இழுக்கும்
மழை வரும் நேரம்..

மழை வரும் நேரம்
நினைவுகள் தூரம்
நீங்காத பயணம்
மனதினில் பாரம்...

எழுதியவர் : வே.புனிதா வேளாங்கண்ணி (25-Nov-17, 7:51 pm)
Tanglish : mazhai varum neram
பார்வை : 102

மேலே