கீழடியே

தமிழரின் பழம்பெரும் தொன்மையே
மண்ணிற்கு அடியில் கிடைத்த அரிய நகரமே
வியப்பினும் வியப்பில் ஆழ்த்திய பழம்பெரும் நாகரிகமே
தமிழர் வாழ்வியலுக்கு கிடைத்த புதையுண்ட பொக்கிஷமே
எடுக்க எடுக்க கிடைக்கும் தொன்மைச்சான்றுகளே.
தமிழர் அடையாளத்திற்கு கிடைத்த ஓர் ஆவணமே.
இன்னும் பூமிக்கடியில் எத்தனை பொக்கிஷங்கள் பாதுகாத்து வைத்துள்ளாயோ கீழடியே.
மாபெரும் சாகாப்தமே மண்ணிலே கிடக்கின்றதே.
இலக்கியச் சான்றுகளுக்கு ஈடாய் கண்ணில் சாட்சிகள் தெரிகின்றதே இது பழம்பெரும் நாகரிகமென்று.
தொன்மையை காட்ட முற்பட
எத்தனை சதிகள் அதை தடுக்க.
தமிழா உயிர்த்தெழு
நமது நாகரிகம் இதுவென்று உலகிற்கு காட்ட
இன்னும் எத்தனை எத்தனை உள்ளடக்கி இருக்கின்றாயோ
கீழடியே
பழம்பெரும் பொக்கிஷமே
உனதடியில் உள்ளதென்று
கீழடி என்று பெயர் கொண்டாயோ....

எழுதியவர் : (26-Nov-17, 10:40 pm)
சேர்த்தது : அரும்பிசை
பார்வை : 105

மேலே