அவர்கள் அப்படித்தான்

அவர்கள் அப்படித்தான்
--------------------------------------------
எல்லோரும் இவ்விடத்தை நன்கு அறிவீர்.
பார்த்தவுடன் ஆரோவில் என்று...
இயற்கை எழில் கொஞ்சும் ஆரோவில்...
ஆரோவில் பாண்டிச்சேரியில் உள்ளதென்றே பலர் நினைக்கின்றனர்.
ஆரோவில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளது.
அப்படி நினைப்பதற்கும் காரணம் இருக்கிறது.
ஏன் என்றால் அது தான் நாங்கள்...
நாங்கள் அப்படித்தான்...
பாண்டிச்சேரிக்கு அருகில் இருந்தால்
இயற்கையாகவே பாண்டிச்சேரி என்று தானே நினைக்கத் தோன்றும்.
நாம் தமிழ்நாடு என்று நினைப்பது போல்.
தமிழ்நாடு - பாண்டி -மீண்டும் தமிழ்நாடு மீண்டும் பாண்டிச்சேரி...இப்படி அமைந்திருக்கும் எங்களின் புரிதல்கள்...
இன்னும் தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்
ஒரு தெரு தமிழ்நாட்டில் இருக்கும்...
பக்கத்து தெரு பாண்டிச்சேரியாக இருக்கும்...
எல்லை என்பது ஒரே புள்ளி தானே..
இருவருக்கும்...
இருவருக்கும் அதுவே தொடக்கம்...அதுவே அந்தம்...
எங்களுக்கு எல்லைகள் என்பது வெறும் கோடு தான்...
எல்லைகள் எங்கள் அன்பிற்கு இல்லவே இல்லை...
நாங்கள் அப்படித்தான்...
விழுப்புரம் பாண்டிச்சேரி கடலூர்...
~ பிரபாவதி வீரமுத்து